பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அதாவது தெரியுமா அழகிரி?

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.கோபால், வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவியை, தமிழகத்திற்கு புதிய கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது.ஒரு மாநிலத்துக்கு கவர்னராக தகுதியான நபரை நியமிப்பது, மத்தியில் ஆளும் அரசின் கடமைகளுள் ஒன்று. அதை தான் மத்திய
அழகிரி, தெரியுமா, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

ஆர்.கோபால், வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவியை, தமிழகத்திற்கு புதிய கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது.ஒரு மாநிலத்துக்கு கவர்னராக தகுதியான நபரை நியமிப்பது, மத்தியில் ஆளும் அரசின் கடமைகளுள் ஒன்று. அதை தான் மத்திய அரசு செய்துள்ளது.

சட்டத்துக்கு மாறாகவோ, விதியை மீறியோ இந்த நியமனம் இல்லை.மொத்தம் 125 எம்.எல்.ஏ.,க்களை பெற்று, தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க.,வே புதிய கவர்னரை வாழ்த்தி வரவேற்கிறது.

ஆனால், வெறும் 18 எம்.எல்.ஏ.,க்களை உடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ், புதிய கவர்னரை கண்டு அஞ்சுவது கொஞ்சம் ஆச்சரியமாகவும், அதிகமான அதிர்ச்சியாகவும் உள்ளது.புதுச்சேரி காங்., அரசுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே, கிரண்பேடியை நியமித்தது போல, தி.மு.க., அரசுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே ஆர்.என்.ரவியை நியமனம் செய்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார்,

தமிழக காங்., தலைவர் அழகிரி.நேர்மையாக ஆட்சி நடத்தும்படி கூறினால், அது அரசுக்கு தொல்லை கொடுப்பதாக அர்த்தமா மிஸ்டர் அழகிரி?நேர்மையான ஆட்சியை நாராயணசாமி நடத்தி இருந்தால், புதுச்சேரி மக்கள் ஏன் அவரையும், காங்கிரசையும் புறக்கணித்தனர்? ஆக ,கோளாறு யார் மீது... நாராயணசாமியிடமா, கிரண்பேடியிடமா?ஆட்சியாளர்கள் அனுப்பும் கோப்புக்களில், கேள்வி கேட்காமல் கண்களை இறுக்க மூடியபடி கவர்னர் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும் என, அழகிரி எதிர்ப்பார்க்கிறாரா?

அப்படி தலையாட்டும் பொம்மையை கவர்னராக நியமித்து தானே, நாட்டிலேயே முதன் முதலாக '356' சட்டத்தை பயன்படுத்தி, கேரளாவில் இருந்த கம்யூ., ஆட்சியை, 1959 ஜூலை 31ம் தேதி, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கலைத்தது.கடந்த 1976ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் தி.மு.க., ஆட்சியை கலைத்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தது, மறைந்த, உங்கள் தலைவி இந்திரா தான். அதாவது உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் அழகிரி?


latest tamil news


மத்தியில் காங்., அரசு இருந்த போது, 100 முறைகளுக்கு மேல் மாநில அரசுகளை கலைத்திருக்கிறது.பா.ஜ., ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளில், இதுவரை எந்த மாநில ஆட்சியாவது, '356' விதியை பயன்படுத்தி கலைக்கப்பட்டுள்ளதா மிஸ்டர் அழகிரி?ஆக, மாநிலத்தில் ஆட்சியில் இருப்போர், மத்தியில் காங்., அரசு இருந்தால் தான் அஞ்ச வேண்டும். பா.ஜ., அரசு இருக்கும் வரை, மாநில ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
20-செப்-202105:50:31 IST Report Abuse
Ramanujam Veraswamy Regarding appointment of Shri RN Ravi as Governor of Tamilnadu, though DMK has not said anything, it speaks through its alliances biz Congress, Thirumavallavan etc. It is obvious. DMK for ensuring smooth relations with new Governor, it welcomes his appointment. This is yet another example of conningness of DMK.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-செப்-202105:06:19 IST Report Abuse
Kasimani Baskaran நீட் எதிர்ப்பு மற்றும் பெரும்பான்மை இந்துக்களுக்கு விரோதிகளாக திமுக நடந்து கொள்வதால் திமுக ஆட்சியை கலைப்பது அவசியமாகிறது.
Rate this:
Cancel
P. Siresh - Chennai,இந்தியா
19-செப்-202110:55:25 IST Report Abuse
P. Siresh காங்கிரஸ் செய்ததை போல.பா.ஜ. க.பும் செய்துவிடும் என்கிற அச்சம்தான் அழகிரிக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X