அமெரிக்கர்களிடம் மோசடி: இந்தியருக்கு 22 ஆண்டு சிறை

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்-போலி 'கால் சென்டர்' நடத்தி, 4,000க்கு மேற்பட்ட அமெரிக்கர்களிடம் 8 கோடி ரூபாய் மோசடி செய்த இந்தியருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.குஜராத் மாநிலம் ஆமதாபாதில், 'கால் சென்டர்' நடத்தியவர் ஷெஷத்கான் பதான், 40. இவரும், உடன் இருந்தவர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த பலரையும் தானியங்கி அழைப்புகள் வாயிலாக தொடர்பு கொண்டனர்.மிரட்டல்தங்கள் மீது நம்பிக்கை

வாஷிங்டன்-போலி 'கால் சென்டர்' நடத்தி, 4,000க்கு மேற்பட்ட அமெரிக்கர்களிடம் 8 கோடி ரூபாய் மோசடி செய்த இந்தியருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.



latest tamil news


குஜராத் மாநிலம் ஆமதாபாதில், 'கால் சென்டர்' நடத்தியவர் ஷெஷத்கான் பதான், 40. இவரும், உடன் இருந்தவர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த பலரையும் தானியங்கி அழைப்புகள் வாயிலாக தொடர்பு கொண்டனர்.மிரட்டல்தங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசியதுடன், பல்வேறு போலி கடன் திட்டங்களையும் அறிவித்தனர். இத்திட்டங்களில் முதல் தவணை செலுத்தினால் கடன் வழங்கப்படும் என கூறினர். இதற்காக நேரடியாகவும், மின்னணு பரிமாற்ற முறையிலும் அமெரிக்கர்கள் பணம் அனுப்பினர்.

இதன்படி 4,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் 8 கோடி ரூபாய் வரை இந்நிறுவனத்தில் செலுத்தினர்.தங்கள் பணத்தை திரும்ப தரும்படி கேட்ட வர்களை எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு பிரிவு, போதைப்பொருள் அமலாக்க பிரிவு, சமூக பாதுகாப்பு அதிகாரிகள் போல் தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஷெஷத்கான் பதான் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.


latest tamil news


வழக்கின் விசாரணை அமெரிக்காவின் வாஷிங் டன் மாகாணம் வர்ஜீனியா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. தீர்ப்புஏற்கனவே மூவர் தண்டனை பெற்ற நிலையில் நான்காம் நபரான பதானுக்கு நீதிமன்றம் 22 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.வழக்கில் சிக்கியுள்ள ஆமதாபாதைச் சேர்ந்த பிரத்சிபின் பர்மார், சம்மர் படேல் ஆகியோருக்கு 20ம் தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
18-செப்-202111:53:48 IST Report Abuse
Vena Suna இந்த கான்களே மோசம் .ஏமாற்றி பொழைக்கறது
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
18-செப்-202110:52:14 IST Report Abuse
Paraman இந்தியாவில் இருந்து இருந்தா இந்நேரம் ஏதாவது கட்சியில் சேர்ந்து சீட் வாங்கி மந்திரியாகி கோடிகளில் புரண்டு இருக்கலாம். இப்போ வெறும் 8. கோடியும் போயி அமெரிக்க சிறையில் பரோல் எதுவும் இல்லாமல் 22.வருடம் அமெரிக்க வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும், மெக்சிக்கர்களுக்கும் பாலியல் துணைவனா இருக்க வேண்டும்
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
18-செப்-202110:44:34 IST Report Abuse
N. Srinivasan கேவலம் இந்தியர்களின் மனதில் திருட்டு கொள்ளை ஏமாற்றல் என்பது ரத்தத்தில் ஊறிய பொருள் ஆகி விட்டது. அதனால்தான் எங்கே போனாலும் நமது மானத்தை வாங்குகிறான். சுட்டு கொல் என்று சொல்லி இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X