பொது செய்தி

தமிழ்நாடு

'எலக்ட்ரிக்' வாகனங்களுக்குக்காக 3 கி.மீ.,க்கு ஒரு 'சார்ஜிங் பாயின்ட்': மத்திய மின்துறை

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மாநகராட்சி பகுதிகளில் 3 கி.மீ., துாரத்துக்கு ஒரு பொது, 'சார்ஜிங் பாயின்ட்' என்ற மையத்தை அமைக்குமாறு, தமிழக மின் வாரியத்தை மத்திய மின் துறை அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினத்தை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, 'எலக்ட்ரிக்' வாகனங்களை

சென்னை : மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மாநகராட்சி பகுதிகளில் 3 கி.மீ., துாரத்துக்கு ஒரு பொது, 'சார்ஜிங் பாயின்ட்' என்ற மையத்தை அமைக்குமாறு, தமிழக மின் வாரியத்தை மத்திய மின் துறை அறிவுறுத்தி உள்ளது.latest tamil newsமத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினத்தை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, 'எலக்ட்ரிக்' வாகனங்களை பயன்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தி வருகிறது.இதனால், தனியார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை வாடகைக்கு வழங்கி வருகிறது.

அரசு உத்தரவு அந்நிறுவனம், சென்னையில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் சார்ஜிங் மையம் அமைத்துள்ளது. தனியார் நிறுவனங்களும் அமைத்து வருகின்றன. வாகனங்களை சார்ஜ் செய்ய, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 11 - 15 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.நாட்டில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரங்களில், 'சார்ஜிங் பாயின்ட்' அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; அதில் சென்னையும் ஒன்று.'வீடியோ கான்பரன்ஸ்'தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பாக, ஒருங்கிணைப்பு பணிகளை மின் வாரியம் மேற்கொள்கிறது.


latest tamil newsமத்திய மின் துறை உயரதிகாரிகள், எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக, தமிழக மின் வாரியம் உட்பட பல மாநில அதிகாரிகளுடன் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர்.அதில், 'அடுத்த இரு ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.'தேசிய நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ., துாரத்துக்கு ஒரு சார்ஜிங் மையமும்; மாநகராட்சி பகுதிகளில் 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
18-செப்-202114:21:02 IST Report Abuse
திரு.திருராம் இரண்டு விதமான சாரஜர் காரில் கொடுக்கப்படும், ஒன்று நார்மல் மற்றொன்று விரைவு சார்ஜர், நார்மல் சார்ஜர் வீட்டில் சாதாரண 3பின் பிளக்கில் போட்டுக்கொள்ளலாம், அது 8 மணிநேரத்தில் 100சதவிகித சார்ஜ் ஏற்றும், விரைவு சார்ஜர் முக்கால் மணி நேரத்தில் 80சதவிகித சார்ஜ் ஏற்றும், எனவே பயணத்தின் ஊடே சார்ஜ் என்றால் அது ரேபிட் சார்ஜ் மட்டுமே, 8மணி நேரத்திற்கு மேலான தங்குதல் என்றால் சாதாரண சார்ஜர், ரேபிட் சார்ஜ் செய்வதற்குதான் இந்த பிரத்யோக சார்ஜர் அமைப்புகள் தேவை,
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
18-செப்-202112:28:35 IST Report Abuse
R Ravikumar எவ்வளவு நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் ? ஒரு யூனிட் பதினைந்து ரூபாய் என்றால் .. எத்தனை யூனிட் சார்ஜ் செய்ய வேண்டும் ? வீட்டில் சார்ஜ் செய்தால் எவ்வளவு நேரம் ஓடும் ? அதில் பல வகை வண்டிகள் , வரையறைகள் மாறுமா ? பெட்ரோல் டீசல் வரி போன்று .. அரசுக்கு எவ்வளவு வரி எடுக்கும் ? வோல்ட்டேஜ் ரேட்டிங் அல்லது பவர் ரேட்டிங் மாற்றி ஒரு தலை பட்சமாக ஒரு குறிப்பிட்ட கம்பெனிகள் மட்டுமே சார்ஜ் பாயிண்ட் சேவை கொடுக்கலாம் என்று வைப்பார்களா? அப்படி வைத்தால் அநியாயம் போல தோன்றுகிறது . மேலும் அதற்கு ஸ்பெஷல் அனுமதி உண்டா ? பொது மக்கள் , பொது மக்களிடமே .. சார்ஜ் செய்து கொண்டால் அரசிற்கு வருமானம் எப்படி வரும் ? முதலில் பொது மக்கள் இந்த சேவை வழங்க அனுமதி உண்டா ? எனது கேள்விகள் சிறுபிள்ளை தனமாக இருந்தாலும் .. விவரம் அறிந்தவர்கள் விளக்கி உதவி செய்யுங்கள் . நன்றி .
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
18-செப்-202111:13:57 IST Report Abuse
suresh kumar வாகனகளில் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்புவதற்கு சுமார் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் போதும். இது போன்ற வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று தெரிவிக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X