சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு அரசு அலுவலர்கள் வீட்டுமனைக்கு போலி பட்டா பெற்றவர் கைது

Added : செப் 18, 2021
Share
Advertisement
மதுரை-மதுரையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் வீட்டு மனைகளுக்கு போலி பட்டா பெற்று மறுவிற்பனை செய்ய முயன்றவரை நில அபகரிப்பு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த துணை தாசில்தார் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.எல்.என்., ஊழியர்கள், ராணுவத்தினர், போலீஸ், அமைச்சு பணியாளர்கள் இணைந்து சங்கம் துவங்கி ஆனையூர்

மதுரை-மதுரையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் வீட்டு மனைகளுக்கு போலி பட்டா பெற்று மறுவிற்பனை செய்ய முயன்றவரை நில அபகரிப்பு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த துணை தாசில்தார் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.எல்.என்., ஊழியர்கள், ராணுவத்தினர், போலீஸ், அமைச்சு பணியாளர்கள் இணைந்து சங்கம் துவங்கி ஆனையூர் பாண்டியன்நகரில் இடம் விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாக பிரித்துக் கொண்டனர். 13 பேர் வீடு கட்டியுள்ளனர். காலி மனைகளுக்கு ஆனையூர் கோசாகுளம் ராஜா செல்வராஜ் 54, வடக்கு சரக துணை தாசில்தார் மீனாட்சிசுந்தரம், உத்தங்குடி ராஜேஷ் 42, ஆகியோர் உடந்தையுடன் ஆன்லைன் மூலம் போலி பட்டா பெற்று விற்க முயன்றார்.போலீஸ் கமிஷனர் பிரேமானந்தா சின்காவிடம் ஓய்வு ஆசிரியைஆஞ்சலா உள்ளிட்டோர் புகார் அளித்தனர். நில அபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.விசாரணையில், அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்தை விற்ற நபர்பெயரும் (ஆண்டிச்சாபான்), ராஜா செல்வராஜின் தாத்தா பெயரும் ஒரே மாதிரி இருந்ததால் அதை பயன்படுத்தி முறைகேடு நடந்திருப்பதுதெரிந்தது. ராஜா செல்வராஜ் கைது செய்யப்பட்டார். மீனாட்சி சுந்தரம், ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X