பெங்களூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை; பூட்டிய வீட்டில் 2 வயது பெண் குழந்தை மட்டும் மீட்பு

Added : செப் 18, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
பெங்களூரு : பெங்களூரு திகளரபாளையாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஐந்து நாட்கள் உணவும், தண்ணீரும் இன்றி, 2 வயது பெண் குழந்தை மயங்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டது.பெங்களூரு திகளரபாளையாவைச் சேர்ந்தவர் சங்கர், 54. இவரது மனைவி பாரதி, 50. இத்தம்பதிக்கு சிஞ்சனா, 33, சிந்துராணி, 30, என்ற மகள்களும்,
 பெங்களூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை; பூட்டிய வீட்டில் 2 வயது பெண் குழந்தை மட்டும் மீட்பு

பெங்களூரு : பெங்களூரு திகளரபாளையாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஐந்து நாட்கள் உணவும், தண்ணீரும் இன்றி, 2 வயது பெண் குழந்தை மயங்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டது.

பெங்களூரு திகளரபாளையாவைச் சேர்ந்தவர் சங்கர், 54. இவரது மனைவி பாரதி, 50. இத்தம்பதிக்கு சிஞ்சனா, 33, சிந்துராணி, 30, என்ற மகள்களும், மது சாகர், 27, என்ற ஒரு மகனும், ஒன்பது மாத ஆண் குழந்தையும், 2 வயதில், ப்ரேக் ஷா என்ற பேத்தியும் இருந்தனர். சங்கர், 'சாசகா' என்ற வாராந்திர பத்திரிகை நடத்தி வருகிறார். கடந்த 12ல் அவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு, நேற்று திரும்பினார். அப்போது, வீட்டின் கதவை பல முறை தட்டியும் திறக்கப்படவில்லை; ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன; வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தது.

இதனால் சந்தேகமடைந்த அவர், பேட்ரஹள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்றிரவு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அப்போது யாரும் எதிர்பாராத வகையில், மனைவி, மகள்கள், மகன் ஆகிய நால்வரும் மின் விசிறியில் அழுகிய நிலையில் துாக்கிட்ட நிலையில் காணப்பட்டனர். அருகில், ஒன்பது மாத ஆண் குழந்தை, தரையில் இறந்து கிடந்தது; 2 வயது பேத்தி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. இதை பார்த்த சங்கர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.தகவலறிந்த பெங்களூரு நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி, டி.சி.பி., சஞ்சீவ் பாட்டீல் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 12ம் தேதியே இவர்கள் ஐவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், குடும்ப தகராறு காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

ஐந்து பேர் இறந்த உடல்களுக்கிடையில், ஆறு நாட்களாக 2 வயது பெண் குழந்தை உயிருடன் இருந்தது அதிர்ஷ்டவசம் என்றே சொல்லப்படுகிறது.அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'நான்கைந்து நாட்களாக வீடு பூட்டியிருந்தது; துர்நாற்றம் வீசியது. ஒரு குழந்தை மட்டும் அழுது கொண்டே இருந்தது. குடும்பத்தில் அடிக்கடி சண்டை நடந்து வந்தது' என்றனர்.

இதற்கிடையில், ஒன்பது மாத குழந்தையை கொன்று விட்டு பெரியவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது உணவின்றி குழந்தை இறந்ததா என்று போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
22-செப்-202121:36:24 IST Report Abuse
சீனி அனைவரும் தூக்கில ஒரே நேரத்தில் தொங்கினா, கொலையா கூட இருக்கலாம்.
Rate this:
Cancel
sivan - seyyur,இந்தியா
22-செப்-202106:09:23 IST Report Abuse
sivan ஐந்து நாட்கள் ஒரு பச்சை குழந்தை அழுது கொண்டே இருந்து இருக்கிறது. வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. பக்கத்த்து வீட்டில் யாரும் என்னவென்றே பார்க்க மாட்டார்களாம்? நல்ல அக்கம் பக்கத்தவர்கள்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
20-செப்-202123:44:58 IST Report Abuse
Aarkay ஒரு வாரமா வெளியில் இருக்கிறாராம். போன் போட்டு விசாரிக்க மாட்டாரா? பலநாட்களுக்கு முன்னே இறந்தவர்களை குறித்த எந்த சந்தேகமும் இவருக்கு வரவில்லையா? இறந்தவர்கள் போன் எடுக்காமல்தானே இருந்திருப்பார்கள் எங்கேயோ இடிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X