கார் நிறுத்துவதில் தகராறு; 'மாஜி'யின் மகன் மீது வழக்கு

Added : செப் 18, 2021
Share
Advertisement
வசந்த் நகர் : தொழிலதிபர் மகனை தாக்கியது தொடர்பாக, பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜல் மகன் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.பெங்களூரு வசந்த நகரின் எம்பசி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விக்ரம் ராய், 30, தன் தந்தையின் தொழிலை பார்த்துக்கொள்கிறார்.இதே குடியிருப்பில், ராய்ச்சூர் லிங்கசூகூரின், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜல் மகன்

வசந்த் நகர் : தொழிலதிபர் மகனை தாக்கியது தொடர்பாக, பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜல் மகன் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

பெங்களூரு வசந்த நகரின் எம்பசி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விக்ரம் ராய், 30, தன் தந்தையின் தொழிலை பார்த்துக்கொள்கிறார்.இதே குடியிருப்பில், ராய்ச்சூர் லிங்கசூகூரின், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜல் மகன் ஆஞ்சனேயாவும் வசிக்கிறார்.சில நாட்களுக்கு முன், அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் காரை நிறுத்தும் விஷயத்தில், விக்ரம் ராய்க்கும், ஆஞ்சனேயாவுக்கும் வாக்குவாதம் நடந்தது.

அப்போது ஆஞ்சனேயாவும், அவரது மூன்று நண்பர்களும் விக்ரம் ராயை தாக்கியதில், அவரது கண்ணின் மேற்பகுதியில் காயம் ஏற்பட்டது.இது தொடர்பாக ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் விக்ரம் ராய் புகார் செய்தார். இதன்படி ஆஞ்சனேயா மற்றும் அவரது நண்பர்கள் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X