பொது செய்தி

இந்தியா

பி.யு.சி., பாட புத்தகங்கள் தாமதம்; பாடம் நடத்த பேராசிரியர்கள் சிரமம்

Added : செப் 18, 2021
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடகாவில், பி.யு.சி., வகுப்புகள் துவங்கி ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இதுவரை பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படுகிறது. புத்தகங்கள் இல்லாமல் பாடம் நடத்துவது பேராசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.பி.யு.சி., பாடப்புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்யும் உரிமையை, கர்நாடக பாடப்புத்தக சங்கத்துக்கு பி.யு., கல்வித்துறை

பெங்களூரு : கர்நாடகாவில், பி.யு.சி., வகுப்புகள் துவங்கி ஒரு மாதம் ஆகிறது. ஆனால் இதுவரை பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படுகிறது. புத்தகங்கள் இல்லாமல் பாடம் நடத்துவது பேராசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

பி.யு.சி., பாடப்புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்யும் உரிமையை, கர்நாடக பாடப்புத்தக சங்கத்துக்கு பி.யு., கல்வித்துறை அளித்துள்ளது.ஆனால் பாடப்புத்தக சங்கம், பள்ளி பாடப்புத்தகங்களையே, இன்னும் அச்சிட்டு முடிக்காததால், பி.யு.சி., பாடப்புத்தகங்கள் அச்சிடுவது தாமதமாகிறது.கர்நாடகாவில், ஆகஸ்ட் 23ல் பி.யு.சி., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.

76 சதவீதம் மாணவர்கள், வகுப்புகளுக்கு ஆஜராகின்றனர். 2021 -- 22ன் கல்வியாண்டு, ஒன்றரை மாதம் தாமதமாக துவங்கியது.இந்நிலையில் பி.யு.சி., பாடப்புத்தகங்கள் கிடைக்காததால் பாடம் கற்க முடியாமல், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். பேராசியர்களுக்கும் கூட பாடப்புத்தகம் இல்லாமல் பாடம் நடத்துவது பெரும் சவாலாக உள்ளது.

பாடப்புத்தக சங்கம், நிர்ணயித்த நேரத்தில் பாடப் புத்தகங்கள் வழங்காதது குறித்து, கேள்வியெழுப்பி கர்நாடக உயர்நீதிமன்றத்தில், சில பெற்றோர் பொது நலன் மனு தாக்கல் செய்தனர்.விசாரணை நடத்திய நீதிமன்றம், செப்டம்பர் 30க்குள் பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கும்படி, பாடப்புத்தக சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.பொதுவாக ஜூனில், டெண்டர் அழைத்து பாடப்புத்தகங்கள் அச்சிட உத்தரவு பிறப்பிக்கப்படும். ஜூலை முதல் வாரத்தில், பாடப்புத்தகங்கள் கிடைத்து வந்தது. ஆனால் கொரோனாவால், வகுப்புகள் தாமதமாக துவங்கியதால், பாடப்புத்தகங்கள் அச்சிடுவதும் தாமதமாகியுள்ளது.

பாடப்புத்தக சங்கம் சமீபத்தில் தான், டெண்டர் கோரியுள்ளது. குறைந்த தொகை குறிப்பிடும் நிறுவனத்திடம், பணிகளை ஒப்படைக்க வேண்டும். டெண்டர் பெறும் நிறுவனம், பாடப்புத்தகங்களை அச்சிட்டு வினியோகிப்பதற்குள் அரை கல்வியாண்டு முடிந்திருக்கும்பாடப்புத்தகங்களை, தனியார் நிறுவனங்கள் அச்சிட்டு, விற்பனை செய்யக்கூடாது. ஆனால் சில தனியார் புத்தக வெளியீட்டாளர்கள், ஜெராக்ஸ் அல்லது பாடப்புத்தகங்களை, இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, அச்சிட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

பேராசிரியர்களின் நெருக்கடியாலும், மார்க்கெட்டில் பாடப்புத்தகங்கள் வருவது தாமதமாவதாலும், மாணவர்கள் வேறு வழியின்றி, இந்த பாடப்புத்தகங்களை வாங்குகின்றனர்.தனியார் வெளியீட்டாளர்களிடம், பாடப்புத்தகங்களை வாங்கிய பின், பாடப்புத்தகங்களை அரசு மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதால், அரசுக்கும் வருவாய் குறைகிறது.

அரசு பி.யு.சி., கல்லுாரிகளின் பேராசிரியர் சங்கத்தின் தலைவர் நிங்கேகவுடா கூறுகையில், ''வகுப்புகளில், மாணவர்களிடம் புத்தகங்கள் இல்லாவிட்டால், நாங்கள் பாடம் நடத்தி என்ன பயன். பாடப்புத்தகங்கள் உடனடியாக கிடைக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X