சேலம் : கள்ளக்காதல் விவகாரத்தில், பெண்ணை சொந்தம் கொண்டாடுவதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளியை அவரது நண்பரே, கத்தியால் குத்தி கொலை செய்தார்.
சேலம், அயோத்தியாப் பட்டணத்தைச் சேர்ந்த இளம்பெண் கலைமணி, 23; இவர் 2017ல் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். 2018ல் மற்றொருவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றார். 2019ல், சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன், 29; கலைமணியை திருமணம் செய்தார்.முருகேசனை விவாகரத்து செய்யாத நிலையில், அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி கிருபைராஜ், 23, என்பவருடன் கலைமணி நெருங்கி பழகினார்.
கிருபைராஜ், கலைமணியை பார்க்க செல்லும்போது அவரது நண்பர் கலையரசன், 23, என்பவரை அழைத்து சென்றார். கலைமணி, கலையரசனுடனும் நெருங்கி பழகினார்.கலைமணி ஆறு மாத கர்ப்பமானார். அவரை யார் திருமணம் செய்து கொள்வது என்பதில், கலையரசன், கிருபைராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று சேலம் கந்தாஸ்ரமம் மலைப் பகுதிக்கு கலைமணி, கிருபைராஜ் சென்றனர்.அப்போது, கலையரசனை தொடர்பு கொண்டு கிருபைராஜ் வரவழைத்தார்.
அவர் வந்ததும் கலைமணியை விட்டுக் கொடுக்க சம்மதம் தெரிவித்த கிருபைராஜ், கடைசியாக அவருடன் ஒருமுறை நெருக்கமாக இருந்தார்.அப்போது, அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலையரசன், கத்தியால் கிருபைராஜை குத்தினார். இதில், அவர் உயிரிழந்தார். கிச்சிப்பாளையம் போலீசார் கலையரசனை கைது செய்தனர். கலைமணியிடம் விசாரிக்கின்றனர்.