பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்யாததால் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை?

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : ''குறுவை சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்யாததால், விவசாயிகளுக்கு மத்திய - மாநில அரசுகள், தலா 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,'' என, டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் - மே மாதங்களில், நிலத்தடி நீர் பாசனம் வாயிலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.


சென்னை : ''குறுவை சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்யாததால், விவசாயிகளுக்கு மத்திய - மாநில அரசுகள், தலா 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,'' என, டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்துள்ளார்.



latest tamil news



அவரது அறிக்கை:டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் - மே மாதங்களில், நிலத்தடி நீர் பாசனம் வாயிலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது. மொத்த குறுவை சாகுபடி பரப்பில் இது, 80 சதவீதம். ஆற்று பாசனம் வாயிலாக, 20 சதவீதம் சாகுபடி நடந்தது. குறுவை நெல் அறுவடை ஜூலை முதல் முழுவீச்சில் நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் அறுவடை முடியும். எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை கொள்முதல் விலையை, ஆக., முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். மழையால் நெல் சேதமாகாமல் இருக்க, அனைத்து தாலுகாக்களிலும், 20 ஆயிரம் முதல், 30 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட, உலர் கலன்களுடன் கூடிய உலோக சேமிப்பு கலன்கள் அமைக்க வேண்டும்.


latest tamil news



நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைத்து, இடைத்தரகர்களை கட்டுப்படுத்த வேண்டும். கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை, ஒரு வாரத்திற்கு இரண்டு முறை வங்கியில் செலுத்த வேண்டும். நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு இழப்பீட்டை விரைந்து பெற்றுத் தர வேண்டும். நடப்பு குறுவை சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்யவில்லை. எனவே, சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மத்திய - மாநில அரசுகள், தலா 10 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-செப்-202109:53:00 IST Report Abuse
ஆரூர் ரங் மழை பாதிப்பு இல்லாத இடங்களுக்கும் இன்ஷூரன்ஸ் ஊக்கத் தொகை கேட்பது சற்றும் நியாயமற்றது 😡. இலவச பித்தலாட்டம் பைத்தியம்😇 தெளிய வேண்டும்
Rate this:
Cancel
18-செப்-202109:51:33 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X