என்னை பழி தீர்க்கின்றனர்: ராகேஷ் அஸ்தானா புலம்பல்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: ''ஒரு சிலர், சட்ட நடைமுறையை அவமதிக்கும் வகையில் பழி வாங்கும் நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என, டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.குஜராத் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், டில்லி போலீஸ் கமிஷனராக
Delhi HC, Rakesh Asthana, Vendetta, Proxy War, Delhi Top Cop

புதுடில்லி: ''ஒரு சிலர், சட்ட நடைமுறையை அவமதிக்கும் வகையில் பழி வாங்கும் நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என, டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குஜராத் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், டில்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப் பட்டார்.


மனு தாக்கல்


இதை எதிர்த்து, பொதுநல விவகார மையம், பொதுநல மையம் ஆகியவை டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுவில், பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக ராகேஷ் அஸ்தானா நியமனம் உள்ளதால், அதை செல்லாது என அறிவிக்கும்படி கோரப்பட்டுஇருந்தது. இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news



அதில் கூறப்பட்டுள்ளதாவது: சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக நான் நியமிக்கப்பட்டதில் இருந்தே எனக்கு எதிராக சிலர், தொண்டு நிறுவனங்களின் பெயரில் பழி தீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் எனக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது. அதற்கான காரணம் தெரியவில்லை.

பொதுநல மனு என்ற பெயரில், என்னை பழி வாங்க சட்ட நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. இது சட்டத்தை அவமதிப்பதாகும். இதை அனுமதிக்கக் கூடாது. எனவே, என் நியமனத்தை ரத்து செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
20-செப்-202113:03:29 IST Report Abuse
jayvee கேஜுவின் ஆட்கள்தான் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பார்கள்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
18-செப்-202116:56:53 IST Report Abuse
வெகுளி அப்படி இந்த தொண்டு நிறுவனங்கள் உண்மையில் செய்யும் தொண்டுதான் என்ன?..... இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது?.... மக்கள் பணிதான் இவர்களின் நோக்கம் என்றால், எங்கு என்னதொண்டு செய்ய வேண்டும் என்பதை அரசிடம் கேட்டு செய்வார்களா?
Rate this:
Narayanan - chennai,இந்தியா
18-செப்-202119:01:12 IST Report Abuse
Narayananதொண்டு நிறுவனங்கள் மத பரப்பிற்கு பயன்படுத்த பணம் வருகிறது . தங்களது மதத்தில் புதியதாக மனிதர்களை உருவாக்குவது கடினம் . ஆகவே இருக்கும் மனிதர்களை பணத்தாசை பதவி ஆசை காட்டி மதம் மாறச்செய்கிறார்கள் . அப்படிசெய்து அவர்களுக்குஞானஸ்தானம் செய்வித்து பெயரை மாற்றினாலும் அவர்களின் முந்தியப்பெயரையும் இணைத்தே வைக்க சொல்கிறார்கள் .அப்போதுதான் இவர்கள் எத்துணை பேரை மதம் மாற்றி இருக்கிறார்கள் என்று ஒரு கணக்கை சமர்ப்பித்து பணம் பெற முடியும் . இப்படி இருக்கும் தொண்டு நிறுவனத்திடம் பணம் வாங்கித்தான் ஸ்டாலின் தேர்தலுக்கு சிலவு செய்தார் . அதன் காரணமே அவர்கள் நாங்கள் போட்ட பிச்சையில்தான் முதல்வராக முடிந்தது என்கிறார்கள் .மேலும் இந்துக்களைவிட அவர்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகிறது . அவர்களின் பண்டிகைகள் எந்த இடையூறும் இல்லாது நடக்கிறது இதனால்தான் ....
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
18-செப்-202115:31:04 IST Report Abuse
r.sundaram யாரின் பொதுநலம் என்றும் விசாரிக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X