என்னை பழி தீர்க்கின்றனர்: ராகேஷ் அஸ்தானா புலம்பல்| Dinamalar

என்னை பழி தீர்க்கின்றனர்: ராகேஷ் அஸ்தானா புலம்பல்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (16)
Share
புதுடில்லி: ''ஒரு சிலர், சட்ட நடைமுறையை அவமதிக்கும் வகையில் பழி வாங்கும் நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என, டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.குஜராத் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், டில்லி போலீஸ் கமிஷனராக
Delhi HC, Rakesh Asthana, Vendetta, Proxy War, Delhi Top Cop

புதுடில்லி: ''ஒரு சிலர், சட்ட நடைமுறையை அவமதிக்கும் வகையில் பழி வாங்கும் நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என, டில்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குஜராத் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், டில்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப் பட்டார்.


மனு தாக்கல்


இதை எதிர்த்து, பொதுநல விவகார மையம், பொதுநல மையம் ஆகியவை டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுவில், பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக ராகேஷ் அஸ்தானா நியமனம் உள்ளதால், அதை செல்லாது என அறிவிக்கும்படி கோரப்பட்டுஇருந்தது. இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


latest tamil newsஅதில் கூறப்பட்டுள்ளதாவது: சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராக நான் நியமிக்கப்பட்டதில் இருந்தே எனக்கு எதிராக சிலர், தொண்டு நிறுவனங்களின் பெயரில் பழி தீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் எனக்கு எதிராக பிரசாரம் நடக்கிறது. அதற்கான காரணம் தெரியவில்லை.

பொதுநல மனு என்ற பெயரில், என்னை பழி வாங்க சட்ட நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. இது சட்டத்தை அவமதிப்பதாகும். இதை அனுமதிக்கக் கூடாது. எனவே, என் நியமனத்தை ரத்து செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X