புதுடில்லி: நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜன., 16ல் துவங்கியது. முதலில் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மார்ச் 1 முதல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏப்., 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நாட்டில் முதல் 85 நாளில் 10 கோடி டோஸ் போடப்பட்ட நிலையில், அடுத்த 45 நாட்களில் 20 கோடி டோஸ், அதற்கடுத்த 29 நாளில் 30 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதன் பின், 24 நாட்களில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 40 கோடியை தொட்ட நிலையில், ஆக., 6ம் தேதி 50 கோடியை தொட்டது. இதைத் தொடர்ந்து 19 நாட்களில் 60 கோடியையும், 13 நாட்களில் 70 கோடியையும் எட்டிய தடுப்பூசி பணி, கடந்த 13ம் தேதி 75 கோடியை கடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE