100 கோடியை நோக்கி... கொரோனா தடுப்பூசி: அதிகரிக்கும் வேகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

100 கோடியை நோக்கி... கொரோனா தடுப்பூசி: அதிகரிக்கும் வேகம்

Added : செப் 18, 2021 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜன., 16ல் துவங்கியது. முதலில் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.மார்ச் 1 முதல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏப்., 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.நாட்டில்
Corona Vaccine, India Fights Corona, Vaccine, Covid Vaccine

புதுடில்லி: நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜன., 16ல் துவங்கியது. முதலில் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மார்ச் 1 முதல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏப்., 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


latest tamil news



நாட்டில் முதல் 85 நாளில் 10 கோடி டோஸ் போடப்பட்ட நிலையில், அடுத்த 45 நாட்களில் 20 கோடி டோஸ், அதற்கடுத்த 29 நாளில் 30 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதன் பின், 24 நாட்களில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 40 கோடியை தொட்ட நிலையில், ஆக., 6ம் தேதி 50 கோடியை தொட்டது. இதைத் தொடர்ந்து 19 நாட்களில் 60 கோடியையும், 13 நாட்களில் 70 கோடியையும் எட்டிய தடுப்பூசி பணி, கடந்த 13ம் தேதி 75 கோடியை கடந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X