பொது செய்தி

இந்தியா

தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல்: முறைகேடுகளால் அதிர்ந்த உலக வங்கி

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: 'எளிதாக தொழில் செய்ய ஏற்ற நாடுகள்' பட்டியலை, முறைகேடுகள் காரணமாக இனி தயாரிக்கப் போவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.முதலீட்டு சூழலின் அடிப்படையில், தொழில் செய்வதற்கு ஏதுவாக எந்த அளவுக்கு ஒவ்வொரு நாடும் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, ஆண்டுதோறும் தர வரிசையை பட்டியலிடும் பணியை செய்து வந்தது உலக வங்கி. ஆனால், சில நாடுகள் தரவுகள் விஷயத்தில் முறைகேடு
China Fraud, Business Ranking, World Bank

புதுடில்லி: 'எளிதாக தொழில் செய்ய ஏற்ற நாடுகள்' பட்டியலை, முறைகேடுகள் காரணமாக இனி தயாரிக்கப் போவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

முதலீட்டு சூழலின் அடிப்படையில், தொழில் செய்வதற்கு ஏதுவாக எந்த அளவுக்கு ஒவ்வொரு நாடும் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, ஆண்டுதோறும் தர வரிசையை பட்டியலிடும் பணியை செய்து வந்தது உலக வங்கி. ஆனால், சில நாடுகள் தரவுகள் விஷயத்தில் முறைகேடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இந்த பட்டியல் தயாரிக்கும் முயற்சியையே கைவிடு வதாக அறிவித்துஉள்ளது உலக வங்கி.


விசாரணை:


குறிப்பாக 2017ம் ஆண்டில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, சீனாவின் உயர்மட்ட வங்கி அதிகாரிகள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களால் தவறான தரவுகள் பெறப்பட்டிருப்பது, விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து உலக வங்கி தெரிவித்துள்ளதாவது: எளிதாக தொழில் செய்வது குறித்த கடந்த கால மதிப்பீடுகள், தணிக்கை அறிக்கைகள், நிர்வாக இயக்குனர்கள் குழுவின் சார்பாக வெளியிடப்பட்ட வங்கி அறிக்கைகள் உட்பட, அனைத்து தகவல்களையும் மதிப்பாய்வு செய்த பின், இனி தர வரிசை பட்டியலை வெளியிட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.


latest tamil newsபுதிய வழி:


மேலும், நாடுகளின் வணிக மற்றும் முதலீட்டு சூழலை மதிப்பிட, இனி ஒரு புதிய அணுகு முறையில் செயல்பட உள்ளோம். அத்துடன், வணிக சூழல் குறித்த தர வரிசை பட்டியலை தயாரிக்க முனைப்புடன் பணியாற்றிய பல ஊழியர்களின் முயற்சிகளுக்கு, உலக வங்கி நன்றி உடையதாக இருக்கும். இவர்களின் ஆற்றலையும், உழைப்பையும் புதிய வழிகளில் பயன்படுத்த உள்ளோம்.

உலக வங்கி குழுவின் ஆராய்ச்சி என்பது மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக கருதப்படுகிறது. இதன் வாயிலாக நாடுகள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவி வருகிறது. பொருளாதார மற்றும் சமூக மேம்பாடுகளை மிக துல்லியமாக அளவிடவும் உலக வங்கியின் ஆராய்ச்சி உதவி வருகிறது.இத்தகைய ஆராய்ச்சி அறிக்கை தனியார் துறை, மக்கள் சமூகம், கல்வித் துறை, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவக்கூடிய ஒரு மதிப்புமிக்க கருவியாக உள்ளது. இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2018 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தரவு முறைகேடுகள் குறித்து புகார்கள் எழவும், அடுத்த ஆண்டுக்கான அறிக்கையை உலக வங்கி நிறுத்திவிட்டது. மேலும், தர வரிசை பட்டியலுக்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் மற்றும் தணிக்கைகள் குறித்த விசாரணையையும் உலக வங்கி துவக்கி உள்ளது.தரவுகள் விஷயத்தில் முறைகேடுகள் நடை பெற்றிருப்பதை கண்டுபிடித்த உலக வங்கி, இனி பட்டியல் தயாரிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது


முன்னேறி வந்த இந்தியா:


கடந்த 2020ம் ஆண்டுக்கான, எளிதாக தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் தர வரிசை பட்டியலில், இந்தியா 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்துக்கு வந்தது. 2014 - 2019ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியா, தர வரிசை பட்டியலில் 79 இடங்கள் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 190 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
18-செப்-202113:16:02 IST Report Abuse
M  Ramachandran உலகம் இந்த சீனா காரணை தீவிரவாத நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். பொய் புனைசுருட்டு அடாவடி தனம் அயோக்கிய தனம் அபகரித்தல் திருட்டு புத்தி அத்தனை அயோக்கியத்தனத்திற்கும் ஊற்றுகண் இந்த சீனா
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
18-செப்-202110:44:59 IST Report Abuse
Paraman இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. உலகில் உள்ள அணைத்து நாட்டு அரசாங்கங்கள், ஐநா, உலக வங்கி, WHO , கல்வி நிறுவனங்கள், புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள், பலநாட்டு உளவுத்துறை நிறுவனங்கள், உயர்நீதி, உச்ச நீதி மன்றங்கள், முக்கியமான சுகாதாரத்துறை, மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள், போன்றவைகளின் தலைமை பதவிகளில் இருப்பவர்கள், செனட்டர்கள்(ஏன் அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி) MP.க்கள் அரசியல்வியாதிகள், மந்திரிகள் கட்சி தலைவர்கள் என்று கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் சீன கம்முனாட்டிஸ்ட் தீய அரசின் பண பட்டுவாடா லிஸ்டில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் ஹாக் செய்யப்பட்ட கணினி தரவுகள் தெரிவிக்கின்றது. அதில் 48000.க்கும் மேற்பட்டோர் சீன அதிபர் டிங்பிங்கின் நேரடி தொடர்பில் இருக்கும் உலக நாட்டு அதிபர்கள், அமைச்சர்கள், புகழ் பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் உச்ச நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் என்ற பதவிகளில் இருப்பவர்கள். இவர்களுக்காக பல பில்லியன் டாலர்கள் சீன கம்முனாட்டிஸ்ட் தீய அரசின் பொலிட்பீரோ செலவு செய்கிறது. சீன கம்முனாட்டிஸ்ட் தீய கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்களில் 65% பேர் கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் ''கிருத்துவராக'' மதம் மாறியவர்கள் அல்லது மாற்றப்பட்டவர்கள் இந்தியாவும் இதில் அடங்கும். சீனன் சும்மா ஒன்றும் எல்லையிலும் லடாக், சிக்கிம் போன்ற இடங்களில் அவன் அசிங்கம் பிடித்த மூக்கையும் வாலையம் ஆட்டவில்லை எல்லாம் உள்நாட்டு வே ..மகன்கள் காட்டி கொடுத்ததால் தான் சீனாவின் உலகையே தங்கள் குடை கீழ் கொண்டுவரும் மிகப்பெரிய அராஜக சதித்திட்டம் அணைத்து மக்கள் விரோத தீயவர்களளாலும் தற்போது நிறைவேற்றபடும் முயற்ச்சியில் உள்ளது.. கொராணா அதன் முதல் தொடக்க புள்ளி. வரும் காலங்களில் இவர்களை எதுவும் செய்ய இயலாவிடின் சீனாவின் அடுத்த அதிரடிகள் உலகமக்களை வாய் பிளக்க வைக்கும். இத்தனை கோடி பேரை சீன கொரானா பலி கொண்டும், உலக நாடுகளின் பொருளாதரம் சீரழிந்தும், அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் சீனாவிற்கு எதிராக ஒரு முக்கல், மொனகல் இன்றி, அணைத்து துவாரங்களையம் மூடி கொண்டு இருப்பதிலேயே நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு மாபெரும் உலக சதித்திட்டத்தை இவுலகம் பார்க்க தொடங்கியுள்ளது
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
18-செப்-202110:23:03 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இங்கே மோடியின் தலைமையில் இந்தியா அடையும் வளர்ச்சியை கண்டு எள்ளிநகையாடும் மூர்க்கசிலுவைகள் கவனிக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X