உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி: அண்ணாமலை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி: அண்ணாமலை

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (72)
Share
சென்னை: ''உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசியலை சுத்தப்படுத்தி வருகிறார்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.தமிழக பா.ஜ.,வின் அறிவுசார் பிரிவு சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின், 71வது பிறந்த நாள் விழா, சிறப்பு கருத்தரங்கம், நேற்று சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடந்தது. இதில், அண்ணாமலை, அரசியல் மற்றும் பொருளாதார
Annamalai, PM Modi, Narendra Modi, BJP

சென்னை: ''உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசியலை சுத்தப்படுத்தி வருகிறார்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.,வின் அறிவுசார் பிரிவு சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின், 71வது பிறந்த நாள் விழா, சிறப்பு கருத்தரங்கம், நேற்று சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடந்தது. இதில், அண்ணாமலை, அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் ஸ்ரீராம் சேஷாத்ரி, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, 'கார்ப்பரேட்' பயிற்சியாளர் ஸ்ரீராம், அகத்தியர் தமிழ் இலக்கிய மன்றத்தின் பத்மாவதி தேவராஜ், பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், அண்ணாமலை பேசியதாவது: மோடியின் சூறாவளி பிரசாரத்தால், 2014ல், பா.ஜ., தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது. அவர், ஏழு ஆண்டுகளாக புனித அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில், காற்று, ஆகாயம், நிலம் என எல்லாத்திலும் ஊழல் செய்யப்பட்டது. இதனால், உலகளவில் இந்தியாவுக்கு மரியாதை இல்லாத நிலை இருந்தது. அதை எல்லாம் ஏழு ஆண்டுகளில் மாற்றி, இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி. அவர், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என தவறான பிரசாரம் செய்கின்றனர்.


latest tamil news


ஐக்கிய அரபு நாடுகளில் ஏழு நாடுகள் உள்ளன. ஏழு நாட்டின் மன்னர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள மாட்டார்கள். ஆனால், முதல் முறையாக ஐக்கிய அரபு நாட்டிற்கு மோடி சென்ற போது, ஏழு மன்னர்களும் ஒன்றாக, விமான நிலையம் வந்து வரவேற்றனர். அவருக்கு மிக பெரிய விருதை வழங்கினர். தமிழகத்தில் சித்தரிக்கிற எந்த ஒரு விஷயத்திற்கும், மோடிக்கும் ஒரு துளிகூட சம்பந்தம் இல்லை. சாதாரணமாக ஒரு மனிதராக, நாட்டு மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்; அரசியலை சுத்தப்படுத்தி வருகிறார்.

மோடி ஆழமான கடல்; அவரை புரிந்து கொள்வது கடினம். சிறந்த நிர்வாகியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். சிறந்த ஆன்மிகவாதியாக செயல்படுகிறார். புரிதல் இல்லாமல் மோடியை விமர்சிக்கின்றனர்.எந்த பரிமாணத்தில் பார்த்தாலும், ஆளுமை திறன் மிக்கவராக செயல்படுகிறார். ஒரு தத்துவமாக, சித்தாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதரை பற்றி புகழ்ந்து பேசுகிறோம். தமிழகம் பா.ஜ., பக்கம்; மோடி பக்கம் திரும்பி விட்டது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X