பொது செய்தி

தமிழ்நாடு

காற்றில் பறக்கும் நடத்தை விதிகள்: பறக்கும் படை என்னாச்சு?

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அன்னுார்:தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களாகியும், பொது இடங்களில் கட்சி சின்னங்கள் அகற்றப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில், அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.அன்னுார் ஒன்றியத்தில் உள்ள கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்ட 13ம் தேதி முதல் நடத்தை விதிகள்

அன்னுார்:தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களாகியும், பொது இடங்களில் கட்சி சின்னங்கள் அகற்றப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில், அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.அன்னுார் ஒன்றியத்தில் உள்ள கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.



latest tamil news


தேர்தல் அறிவிக்கப்பட்ட 13ம் தேதி முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தல் நடைபெறும் ஒன்றியம் முழுவதும், நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும். தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பிலிருந்து 5 கி.மீ., சுற்றளவிற்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அன்னுார் ஒன்றியத்தில், 15 ஊராட்சிகளில் 59 ஆயிரத்து 201 பேர் வாக்களிக்க உள்ளனர்.
எனினும், எந்த ஊராட்சியிலும் நேற்று மாலை வரை பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், கட்சி சின்னங்கள் அகற்றப்படவில்லை. பொது இடங்களில் வரையப்பட்ட கட்சி சின்னங்கள் அழிக்கப்படவில்லை. கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்படவில்லை.தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படைகள் இதுவரை அமைக்கப்படவில்லை.


latest tamil news


அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலகங்களை தேர்தல் முடியும் வரை பயன்படுத்தக்கூடாது. எனினும், சில ஊராட்சிகளில் கட்சி பொறுப்பில் உள்ள ஊராட்சி தலைவர்கள் வழக்கம்போல் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து பணிகளை கவனித்து வருகின்றனர்.'தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
18-செப்-202110:06:47 IST Report Abuse
S. Narayanan திமுக அரசு எதை உருப்படியா பண்ணி இருக்கு இதை மக்கள் எதிர்பார்க்க.
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
18-செப்-202109:54:02 IST Report Abuse
S Regurathi Pandian படத்தில் உள்ளது கட்சி சின்னமா? இல்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X