நீங்கள் சொன்ன 3 விஷயங்களுக்கும், பிரதமர் மோடிக்கும் சம்பந்தம் இல்லையே...

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
'நீட்' வினாத்தாளை கடத்தி, 35 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த அவலம் ஜெய்ப்பூரில் அம்பலமாகியுள்ளது. மறுபக்கம் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் வாட்டுகின்றன. இந்நிலையில், நீட்டை நிறுத்த மாட்டோம் என மோடி அரசு அடம் பிடிப்பது நியாயம் தானா?- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்'நீங்கள் சொன்ன மூன்று விஷயங்களுக்கும், பிரதமர்
நீங்கள் சொன்ன 3 விஷயங்களுக்கும், பிரதமர் மோடிக்கும் சம்பந்தம் இல்லையே...

'நீட்' வினாத்தாளை கடத்தி, 35 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த அவலம் ஜெய்ப்பூரில் அம்பலமாகியுள்ளது. மறுபக்கம் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் வாட்டுகின்றன. இந்நிலையில், நீட்டை நிறுத்த மாட்டோம் என மோடி அரசு அடம் பிடிப்பது நியாயம் தானா?
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்


'நீங்கள் சொன்ன மூன்று விஷயங்களுக்கும், பிரதமர் மோடிக்கும் சம்பந்தம் இல்லையே...' என, கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.



தி.மு.க., அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்பதெல்லாம் இல்லை. அப்படி என்ன செய்து விட்டனர்... எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற பாணியில் அரைகுறையாக எதையோ செய்து வருகின்றனரே தவிர, ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.
- தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை


'நுாறு நாள் ஆட்சியில் என்ன ஆக்கப்பூர்வமாக செய்துவிட முடியும்; ஏழு ஆண்டு மத்திய பா.ஜ., ஆட்சியில் அப்படி என்ன ஆக்கப்பூர்வமாக செய்தீங்க என, காங்கிரசார் கேட்கின்றனரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி.



'ஆரியம், திராவிடம் வெவ்வேறு அல்ல; இரண்டும் ஒன்று தான்' என்கிறார் நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இப்படி கூறி, ஆரியம் எனும் பிராமணியத்தையும், அதை எதிர்த்துப் போராடிய திராவிடத்தையும் சமப்படுத்துகிறார். இது வரலாற்று துரோகம் மட்டுமல்ல; ஆரியத்தை காப்பாற்றும் வேலையும் கூட.
- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்


latest tamil news




'உங்களை விட அவர் நன்கு விஷயம் அறிந்தவர். அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.



பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரளா தான் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடம் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானுக்கு கிடைத்துள்ளது. பழங்குடி இன மக்களுக்கு மட்டுமல்ல; தேச மக்கள் நலனுக்கே விரோதிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள்.
- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'அப்படியானால் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டு வைத்துள்ள தமிழக அரசியலில் பழங்குடியினருக்கு ஆபத்து தானா...' என, அப்பாவித்தனமாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.



அடுத்த ஆறு மாதங்களில் தொற்று பரவலை எளிதாக கட்டுப்படுத்தும் நிலை வரும். இதனால் சுகாதார உள்கட்டமைப்பு மீதான அழுத்தம் குறையும். இறப்பு மற்றும் நோயற்ற தன்மை கட்டுப்பாட்டில் இருந்தால், நாம் நோய் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.
- தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தின் இயக்குநர் சுஜித் சிங்


'கொரோனா மூன்றாவது அலை வந்து விட்டதோ என பலரும் அஞ்சும் நிலையில், உங்களின் பேட்டி நிம்மதியை தருகிறது...' என, கூறத் துாண்டும் வகையில், தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தின் இயக்குநர் சுஜித் சிங் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
20-செப்-202112:36:15 IST Report Abuse
jayvee அப்படியென்றால் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கம்யூனிச கொளகை அடிப்படையில் செயல்படுவதால், நீங்களும் தீவிரவாதியா பாலு ?
Rate this:
Cancel
18-செப்-202118:40:59 IST Report Abuse
theruvasagan ஒரே ஒரு தொகுதியில் சில வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டு போன்ற முறைகேடுகள் நடந்தால் ஒட்டு மொத்தமா தேர்தலே நடத்தக்கூடாதுன்னு கேப்பீங்களா உத்தம ராசா.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
18-செப்-202115:56:57 IST Report Abuse
a natanasabapathy கொள்கையும் மக்கள் ஆதரவும் இல்லாத கம்யூனிஸ்ட் எதையாவது உளறிக்கொண்டு இருக்கிறது ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்கிறார்கள் சாலை விபத்தில் பலர் உயிர் இழக்கிறார்கள் ரயில் பேருந்து ஓடக்கூடாது என்று நிறுத்தி விடுவோமா தமிழ்நாட்டில் வேலைக்கு ஏன் தேர்வு வைக்கிறார் கள் plus 2 மார்க்கை வைத்து தேர்வு செய்வது தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X