பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக கவர்னராக ரவி பதவியேற்பு; காங்., இடதுசாரிகள் புறக்கணிப்பு

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தின் 25வது கவர்னராக ஆர்.என்.ரவி, 69, இன்று(செப்.,18) பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் காங்., இடதுசாரிகள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை . காங்., சார்பில் ஹசன் மவுலானா எம்எல்ஏ., மட்டும் பங்கேற்றார். நாகாலாந்து மாநில கவர்னராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி, தமிழக
தமிழகம், கவர்னர், ரவி, ஆர்என்ரவி, பதவியேற்பு, பதவியேற்றார்,

சென்னை: தமிழகத்தின் 25வது கவர்னராக ஆர்.என்.ரவி, 69, இன்று(செப்.,18) பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் காங்., இடதுசாரிகள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை . காங்., சார்பில் ஹசன் மவுலானா எம்எல்ஏ., மட்டும் பங்கேற்றார்.

நாகாலாந்து மாநில கவர்னராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான, மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய போது, ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில், வன்முறைக்கு எதிராக முக்கிய பங்காற்றினார். தெற்காசியாவில் மனித குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றவர். நாட்டின் எல்லைகளில் உள்ள மக்களின் சமூக அரசியலில் பெரும் பங்காற்றியவர்.


தமிழகத்தின் 26வது கவர்னர் ஆர்என்ரவி பதவியேற்பு

latest tamil news





இன்று காலை 10:30 மணிக்கு, கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், தமிழக கவர்னராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து கவர்னர் ரவிக்கு, ஸ்டாலின் புத்தகம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார். சஞ்சீப் பானர்ஜி, ரவி மற்றும் அவரது மனைவிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை, புதிய கவர்னர் ரவிக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் வாசன், பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே. மணி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தி.மு.க., எம்.பி., கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
18-செப்-202121:43:16 IST Report Abuse
Nagercoil Suresh புதிய கவர்னர் தன்னுடைய மனைவியோடு மேடையில் அமர்ந்திருந்து பதவியேற்றார் அதேபோல் தமிழக முதல்வர்களாக பதவி ஏற்பவர்களும் தங்களுடைய மனைவியை மேடையில் அமரவைத்து பதவியேற்க கற்றுக்கொள்ளவேண்டும், பெண்களுக்கு சம உரிமை என கூவினால் மட்டும்போதாது செயலிலும் இருக்கவேண்டும்..தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் தூதுவராக இருந்து நல்ல திட்டங்களுக்கு ஊக்கம் அளித்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
18-செப்-202119:01:24 IST Report Abuse
krish குற்றமுள்ள, குறுகிய குண நெஞ்சங்கள், கூனி குறுங்கி பதுங்கி ஒதுங்குவது உள்ளங்கை நெல்லிக்கனி. அரண்டவன் கண்களுக்கு, இருண்டதெல்லாம் பேய்தான். களங்கம் இல்லா, கதிரவன் கதிர்வீச்சுக்கள், காணத் திறனிலா கண்களை கூச செய்வது இயல்பு, இயற்கை.
Rate this:
Cancel
18-செப்-202118:28:44 IST Report Abuse
theruvasagan அங்க உண்டி குலுக்க முடியாது. அதனாலதான் போகல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X