ஸ்விக்கி, ஸொமேட்டோ நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.,| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'ஸ்விக்கி, ஸொமேட்டோ' நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.,

Added : செப் 18, 2021
Share
புது டில்லி: நேற்று நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் 'ஸ்விக்கி, ஸொமேட்டோ' போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.ஓட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டு வருகிறது.ஆனால் பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் இந்த வரிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிவிட்டு அவற்றை

புது டில்லி: நேற்று நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் 'ஸ்விக்கி, ஸொமேட்டோ' போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

ஓட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டு வருகிறது.ஆனால் பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் இந்த வரிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிவிட்டு அவற்றை அரசுக்கு முறையாக கட்டுவது இல்லை.இதையடுத்து உணவு டெலிவரி நிறுவனங்களை ஜி.எஸ்.டி.,வரம்பிற்குள் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி அந்த நிறுவனங்களே வாடிக்கையாளர்களிடம் இருந்து வரியை வசூலித்து, அரசுக்கு செலுத்த வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதலாக தொகை எதுவும் செலுத்த வேண்டியிருக்காது என கூறப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X