4,000 அமெரிக்கர்களை ஏமாற்றிய இந்தியருக்கு சிறை

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் 4,000க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த ஷேஸாத்கான் பதான்,40, என்பவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் வர்ஜீனியா மாவட்ட நீதிமன்ற அட்டர்னி ராஜ் பாரேக் தீர்ப்பில் தெரிவித்து உள்ளதாவது:ஷேஸாத்கான் பதானும், அவரது கூட்டாளிகளும் பல்வேறு வழிமுறைகளில் 4,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை
US court, sentenced an Indian, 22 years in prison, defrauding over 4000 Americans, 4000 அமெரிக்கர்கள், அமெரிக்கர்களை ஏமாற்றிய இந்தியர், 22 ஆண்டு சிறை,

வாஷிங்டன்: அமெரிக்காவில் 4,000க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த ஷேஸாத்கான் பதான்,40, என்பவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்ஜீனியா மாவட்ட நீதிமன்ற அட்டர்னி ராஜ் பாரேக் தீர்ப்பில் தெரிவித்து உள்ளதாவது:
ஷேஸாத்கான் பதானும், அவரது கூட்டாளிகளும் பல்வேறு வழிமுறைகளில் 4,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளனர். தேசிய புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ., போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டி.இ.ஏ., மற்றும் பிற அரசுத் துறைகளின் அதிகாரிகளைப் போல் அவர்கள் நடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டி, ஏராளமான தொகையைக் கேட்டுப் பெற்றுள்ளனர்.


latest tamil newsஅதுமட்டுமன்றி, கடன் வாங்கித் தருவதாக ஏமாற்றி ஏராளமானவர்களிடம் ஷேஸாத்கான் பதான் தலைமையிலான கும்பல் பணம் பறித்துள்ளது. அந்தக் கும்பலிடம் சிக்கியவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள்தான். அவர்கள் தங்கள் சேமிப்பை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த பல கோடி டாலர் மதிப்பிலான மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டமைக்காக ஷேஸாத்கானுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-செப்-202120:07:39 IST Report Abuse
Ramesh Sargam அங்கேயும் இவங்க வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்களா..???
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
18-செப்-202117:25:22 IST Report Abuse
Raman பண்ணது குஜராத்காரன். போடும் கருத்துக்களை பாருங்கள்.. சென்னையை தாண்டாதவர்கள்.. இவனுங்களுக்கு இஸ்லாமியரை தீண்டலைன்னா சாப்பாடு இறங்காது போல. என்ன கொடுமை சரவணா ?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
18-செப்-202117:23:43 IST Report Abuse
Sampath Kumar ஏமாற்றுவது என்பது மதத்தின் அடிப்படியில் அல்ல மனதின் அடிபடியில் தான் எல்லா மதமும் நல்லதை தான் சொல்கிறது மனிதம் அதனை ஏற்க மறுக்கிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X