பொது செய்தி

தமிழ்நாடு

பணம், பரிசு பொருள் எடுத்து செல்வதை தடுக்க 12 பறக்கும் படை

Added : செப் 18, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் மாவட்டத்தில், பணம், பரிசு பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.வேலுார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி, பணம், பரிசுப் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் ஏழு ஒன்றியங்களிலும் 52 பேர் அடங்கிய 12 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. இந்த படையினர் இன்று முதல் 24 மணி நேரமும்
பணம், பரிசு பொருள் எடுத்து செல்வதை தடுக்க 12 பறக்கும் படை

வேலுார்: வேலுார் மாவட்டத்தில், பணம், பரிசு பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி, பணம், பரிசுப் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் ஏழு ஒன்றியங்களிலும் 52 பேர் அடங்கிய 12 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. இந்த படையினர் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படுவார்கள். உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம், நகை, பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்வார்கள். இது குறித்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பேனர் வைக்க கூடாது. அனுமதியில்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. அதிக கூட்டம் கூட்டி ஓட்டு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X