பொது செய்தி

இந்தியா

கோவிட் 3வது அலை மோசமாக இருக்காது: வைராலஜிஸ்ட் ககன்தீப் காங்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 'கோவிட் வைரஸ் மேலும் புதிய உருமாற்றம் அடையாமல் இருந்தால், 2வது அலையைப் போல் நாட்டில் மோசமான பாதிப்புகளை 3வது அலை ஏற்படுத்தாது' என, மூத்த வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையின் பேராசிரியரும், மூத்த வைராலஜிஸ்டுமான ககன்தீப் காங் பேசியதாவது: நாட்டில் இப்போதுள்ள சூழலில் புதிதாக எந்த உருமாற்ற கோவிட் வைரசும்

புதுடில்லி: 'கோவிட் வைரஸ் மேலும் புதிய உருமாற்றம் அடையாமல் இருந்தால், 2வது அலையைப் போல் நாட்டில் மோசமான பாதிப்புகளை 3வது அலை ஏற்படுத்தாது' என, மூத்த வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.



latest tamil news




வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையின் பேராசிரியரும், மூத்த வைராலஜிஸ்டுமான ககன்தீப் காங் பேசியதாவது: நாட்டில் இப்போதுள்ள சூழலில் புதிதாக எந்த உருமாற்ற கோவிட் வைரசும் உருவாகாமல் இருந்தால், 3வது அலை வந்தாலும், 2வது அலையைப் போல் மோசமான பாதிப்புகள் இருக்காது. மக்கள் தங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால்கூட வைரசால் மோசமான பாதிப்புகள் ஏற்படாது. அதேநேரம் புதிய உருமாற்ற கோவிட் வைரஸ்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்குவதும், ஒழுங்குமுறைகளை வலிமைப்படுத்துவதும் அவசியம்.


latest tamil news




கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை இருந்த 2வது அலையால் நாட்டின் சுகாதாரத்துறை கட்டமைப்பே திணறியது. தொற்றுநோய்களைக் கையாள்வதில் இந்திய தடுப்பூசி மருந்துத்துறை மிகவும் தனித்துவமானதுதான். ஆனால், அந்தத் துறை இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். நாம் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், அதை எதிர்காலத்துக்கும் எடுத்துச் சென்று வலிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
18-செப்-202114:20:47 IST Report Abuse
THINAKAREN KARAMANI 3வது அலை வந்தாலும் 2வது அலையைப் போல் மோசமான பாதிப்புகள் இருக்காது என்ற இந்தச் செய்தி சற்றே ஆறுதலளிக்கும் செய்தியாக உள்ளது. எப்படியிருந்தாலும் மக்கள் தங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால்தான் மக்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-செப்-202113:29:35 IST Report Abuse
A.George Alphonse கரோண வைரஸ் இப்போதுள்ள சூழ்நிலையில் உருமாற்றம் அடையாமல் இருந்தால் ஆபத்து இல்லை என்று எல்லோருக்குமே தெரியும்.
Rate this:
Cancel
18-செப்-202113:03:05 IST Report Abuse
ஆரூர் ரங் வரும் ஆனா😷🥴😷 வராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X