பாலிவுட் நடிகர் சோனுசூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு!

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், 48. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம்பெயர்
sonusood, cbdt, taxevasion, சோனுசூட், வரிஏய்ப்பு,

புதுடில்லி: பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், 48. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவினார். இதன் வாயிலாக தேசிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் மும்பை மற்றும் லக்னோவில் சோனு சூட் உடன் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த செப்.15 ல் சோதனை நடத்தினர். 'ரியல் எஸ்டேட்' தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
மும்பையை சேர்ந்த பிரபல நடிகருக்கு சொந்தமான இடங்களிலும், லக்னோவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டில்லி, குருகிராமில் உள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
நடிகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் இடங்களில் நடந்த சோதனையின் போது, அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவரை 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோனுசூட் போலியான நிறுவனங்களிடம் இருந்து போலியாக கடன் வங்கி கணக்கில் வராத சொத்து சேர்த்து உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-செப்-202118:03:32 IST Report Abuse
NicoleThomson கடைசியில் இவனும் ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் என்பதனை படிக்கையில் வேதனை தான் மிஞ்சுது
Rate this:
Cancel
18-செப்-202117:04:05 IST Report Abuse
அப்புசாமி ஐயோ பாவம். நிறைய பேருக்கு நிறைய ஒத்தாசைகள் செஞ்சாரே... இவர் பா.ஜ வுல சேராததுதான் பெரிய தப்பு.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18-செப்-202116:58:11 IST Report Abuse
A.George Alphonse யாரைத்தான் நம்புவதோ?
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
18-செப்-202122:59:08 IST Report Abuse
HSRயாரை வேண்டுமானாலும் நம்புங்க பாதிரி தவிர...
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
19-செப்-202108:24:49 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்டுமீலன்ஸ் திராவிடம் என்று பேசும் விஷத்தை இன்னமும் நம்புகிறாங்க அதை விட இவர் ஆபத்தானவர் இல்லை...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19-செப்-202116:23:13 IST Report Abuse
NicoleThomsonஹஸ்ர அவர்களே நீங்க கூறுவது போல எல்லாரும் கெட்டவர்கள் இல்லை , எல்லாரும் நல்லவர்களும் இல்லை , ஐயா அல்போன்ஸ் அவர்கள் பலநேரங்களில் இந்திய நலனை கருத்தில் கொண்டு மட்டுமே பதிவிட்டு வந்துள்ளார் , தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்த பின்னர் தான் தமிழ்நாட்டில் மாய ஊடகங்களின் திரை எண்களின் கண்ணில் விலகியது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X