ராகுலால் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது: திரிணாமுல் காங்கிரஸ் 'பளீச்'

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
கோல்கட்டா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜகோ பங்களா என்ற பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதோடு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்களையும் இந்த பத்திரிகை வெளிப்படுத்தி வருகிறது.இந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் நேற்று (செப்., 17) வெளியான கட்டுரையில், காங்கிரஸ் முன்னாள்

கோல்கட்டா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜகோ பங்களா என்ற பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதோடு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்களையும் இந்த பத்திரிகை வெளிப்படுத்தி வருகிறது.



latest tamil news



இந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் நேற்று (செப்., 17) வெளியான கட்டுரையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மிகக் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது: பிரதமர் மோடியை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியில் முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை. மோடிக்கு மாற்று சக்தியாக ராகுலை தயார்படுத்த பல தடவை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் ராகுலால் அந்த வாய்ப்புகளில் வெற்றி பெற இயலவில்லை. அவர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டார்.


latest tamil news


ராகுலால் ஒரு போதும் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது. மோடிக்கு மாற்று சக்தியாக ராகுல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மோடியை எதிர்க்கும் ஒரே தலைவராக தற்போது மம்தா பானர்ஜி மட்டுமே உள்ளார். ஒட்டு மொத்த நாடும் மம்தாவின் தேசிய அரசியல் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. மம்தா பானர்ஜியை தேசிய தலைவராக ஏற்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுரையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், ராகுலை மிகக் கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது வெளியாகி இருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
18-செப்-202123:58:17 IST Report Abuse
Aarkay ராகுலால் ஒரு கவுன்சிலர் தேர்தல் கூட ஜெயிக்க இயலாது சொந்த பலத்தில்.
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
19-செப்-202109:28:46 IST Report Abuse
mathimandhiriஅப்போ அந்த ""எம்.பி"" எப்படி கேரளாவில் நின்னு ஜெயிச்சாரு ,/////பதில் சொல்லியே ஆகணும் இப்போ.ஆமாம்....
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
19-செப்-202114:59:18 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்மதிமந்திரி நீங்க மதியையும் பயன்படுத்தனும் ஆர்கே சொன்னது சரி ராகுல் சொந்த பலம் கொண்டு கேரளாவில் செயிக்கலை சிறுபான்மையின மக்களிடம் இருக்கும் காங்கிரசின் செல்வாக்கில்தான் செயித்தார் "வடக்கே நான் தேறாத கேஸ்" என்று உணர்ந்துதான் கேரளாவில் போட்டியிட்டார்...
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
18-செப்-202122:44:33 IST Report Abuse
செல்வம் 3 மூன்று மனிதர்கள் கட்சி ஆரம்பித்து மோடியை .எதிர்த்தால் வென்று விடுவார்கள். 1. புத்தர் 2. இயேசு 3. காந்தி. ஆனா பாருங்க மூன்று பேருமே இறந்துட்டாங்க ஒருவேளை திரும்பி வந்தாலும் மோடிய பார்த்து நீங்களே எங்களை விட நல்ல ஆட்சி பண்ணுவீங்கன்னு போயிடுவாங்க. இதுல திதி பீதின்னுகிட்டு
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
18-செப்-202121:23:33 IST Report Abuse
GANESUN பீட்டர் தளபதி போடும் ரொட்டி துண்டுக்கு கூவுகிறார். நாளை ராவுல் பீட்டருக்கு டெல்லியில் பெரிய பதவி குடுதால் கூவல் திசை மாறிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X