அவமானத்துடன் பதவியில் தொடர விரும்பவில்லை- அமரீந்தர் கோபம்! முதல்வர் பதவியில் இருந்து விலகல்?

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுடன் ஆலோசனை நடத்திய அவர், அவமானபடுத்தியது போதும், 3வது முறையாக அவமானபடுத்தப்படுகிறேன். இதுபோன்ற அவமானங்களுடன் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.பஞ்சாப் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற
AmarinderSingh, Congress party, PunjabCongress,  அமரீந்தர்சிங், காங்கிரஸ், பஞ்சாப், முதல்வர், punjab, congress,

சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுடன் ஆலோசனை நடத்திய அவர், அவமானபடுத்தியது போதும், 3வது முறையாக அவமானபடுத்தப்படுகிறேன். இதுபோன்ற அவமானங்களுடன் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாப் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் காங்கிரசில் உட்கட்சி மோதல் வலுத்து வருகிறது. முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து இன்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பஞ்சாப் வந்த கட்சியின் மேலிட பார்வையாளர் அஜய் மக்கான், கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதேபோல், முதல்வர் அமரீந்தர் சிங்கும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று மாலை நடக்கும் எம்.எல்.ஏ.,க்கள் குழு கூட்டத்திற்கு பிறகு, முதல்வர் மாற்றம் குறித்த தகவல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலைக்குள் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வார் என்ற மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.


latest tamil news


அமரீந்தர் சிங் பதவி விலகும் பட்சத்தில், அடுத்த முதல்வராக சுனில் ஜக்கார், பிரதாப் சிங் பஜ்வா, ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
18-செப்-202116:44:10 IST Report Abuse
 Muruga Vel சித்து காங்கிரசில் சேர்ந்து வந்த ஜோலிய முடிச்சுட்டார் ..ED இன்கம்டேக்ஸ் மாதிரி இது புது கலாச்சாரமா இருக்கே ..
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
18-செப்-202116:11:46 IST Report Abuse
Duruvesan சித்து, பிரியங்கா இருவரும் பிஜேபி ஆட்கள், காங்கிரஸ் முடிந்தது
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-செப்-202116:06:09 IST Report Abuse
Vena Suna பாவம் மனுஷன்.காங்கிரஸ் உருப்படாது. சிதது செய்யும் வேலை.முதல்வர் ஆக கனவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X