பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமனம்: மாநில தேர்தல் ஆணையம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி,
உள்ளாட்சி, தேர்தல், கண்காணிக்க, 9 பார்வையாளர்கள், மாநில தேர்தல், ஆணையம், நியமனம்

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், செப்டம்பர் 15ம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதுவரை உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இனி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் https://tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (செப்.,18) மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களுக்கும் தேர்தலை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரத்துக்கு அமுதவள்ளி, செங்கல்பட்டுக்கு சம்பத், விழுப்புரம் பழனிசாமி, கள்ளக்குறிச்சி விவேகானந்தன், வேலுார் விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை மதுமதி, திருப்பத்துார் காமராஜ், திருநெல்வேலி ஜெயகாந்தன், தென்காசி பொ.சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வருகின்ற 22ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நாள் முதல் பணியை துவக்குவார்கள். தேர்தல் பார்வையாளர்கள் மொபைல் எண்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
18-செப்-202123:56:20 IST Report Abuse
Vena Suna பாதிரியாளர்கள் மற்றும் அந்த ஆளுங்க மீது கவனம் தேவை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-செப்-202123:55:05 IST Report Abuse
Vena Suna பத்திரியாளர்கள் மற்றும் அவர் ஆளுங்க மீது தனிப்பட்ட கவனம் தேவை
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
18-செப்-202122:39:57 IST Report Abuse
Mohan எப்புடி கொரோனா பரவுதுன்னா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X