ஜம்மு காஷ்மீர் இளைஞர் வேலை வாய்ப்புக்காக 350 கோடி மதிப்பில் புதிய திட்டம்| Dinamalar

ஜம்மு காஷ்மீர் இளைஞர் வேலை வாய்ப்புக்காக 350 கோடி மதிப்பில் புதிய திட்டம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (10)
Share
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகாலமாக இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் முன்னதாக மத்திய பாஜ., அரசால் நீக்கப்பட்டது. இதனை அடுத்து பிற மாநிலங்கள் போலவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் வளர்ச்சிப்பணிகளையும் புதிய திட்டங்களையும் மோடி அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில லெப்டினாண்ட் கவர்னர்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகாலமாக இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் முன்னதாக மத்திய பாஜ., அரசால் நீக்கப்பட்டது. இதனை அடுத்து பிற மாநிலங்கள் போலவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் வளர்ச்சிப்பணிகளையும் புதிய திட்டங்களையும் மோடி அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.



latest tamil news



இதனைத்தொடர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில லெப்டினாண்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா 350 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய இளைஞர் சேவை மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடு திட்டத்தை துவக்கி வைத்தார். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு இளைஞர் வேலை வாய்ப்புக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளர்.


latest tamil news



ராம்நகர், ரியாஸி, கத்துவா மாவட்டங்களில் புதிய திட்டங்களைத் துவக்கி வைத்த அவர் 11 புதிய கட்டுமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மாணவர்கள் நலன் கருதி புதிய கல்விக்கொள்கை ஜம்மு காஷ்மீர் மாநில பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சின்ஹா,'காலத்துக்கேற்ப மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தங்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். ஏட்டுக் கல்வி மட்டுமல்லாம் மாணவர்களுக்கு நேரடி திறன் பயிற்சி அளிக்கும் நோக்கில் ஜம்மு காஷ்மீர் மாநில பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவுள்ளது'இவ்வாறு மனோஜ் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X