ரூ.20 கோடி வரி ஏய்ப்பு சோனு சூட் மீது புகார்

Added : செப் 18, 2021
Share
Advertisement
புதுடில்லி:பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், 20 கோடி ரூபாய்க்கும் அதிக மாக வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசித்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனு சூட், 48. மும்பை மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.இந்நிலையில், வருமான
 ரூ.20 கோடி வரி ஏய்ப்பு சோனு சூட் மீது புகார்

புதுடில்லி:பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், 20 கோடி ரூபாய்க்கும் அதிக மாக வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசித்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனு சூட், 48. மும்பை மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.இந்நிலையில், வருமான வரித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சோனு சூட், 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தவிர, 'கிரவுட் பண்டிங்' எனப்படும் இணையதளம் வாயிலாக நிதி திரட்டும் முறையில், வெளிநாட்டு நன்கொடையாளர்களிடம் இருந்து 2.1 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளார். கடந்த ஆண்டு ஜூலையில் இவர் துவங்கிய தொண்டு நிறுவனம் சார்பில், 18 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.இதில் நிவாரணப் பணிகளுக்காக, 1.9 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது; மீதமுள்ள 17 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் உபயோகிக்கப்படுத்தாமல் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X