பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 18, 2021
Share
Advertisement
செப்., 19, 1980ஈரோடு மாவட்டம் கொடுமுடியில், 1908 அக்., 1௧ல் பிறந்தவர் கே.பி.சுந்தராம்பாள். சிறு வயதிலேயே வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவில் இணைந்து நடித்தார். 'நல்லதங்காள்' நாடகத்தில் ஆண் வேடத்தில் நடித்தார். இவரது, 'வெண்கல' குரல், ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. 1917ல் இலங்கை சென்று நாடகங்களில் நடிக்க துவங்கினார். 1929ல் நாடு திரும்பி, 'வள்ளி திருமணம்,
இதே நாளில் அன்று


செப்., 19, 1980



ஈரோடு மாவட்டம் கொடுமுடியில், 1908 அக்., 1௧ல் பிறந்தவர் கே.பி.சுந்தராம்பாள். சிறு வயதிலேயே வேலுநாயர் - ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவில் இணைந்து நடித்தார். 'நல்லதங்காள்' நாடகத்தில் ஆண் வேடத்தில் நடித்தார். இவரது, 'வெண்கல' குரல், ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. 1917ல் இலங்கை சென்று நாடகங்களில் நடிக்க துவங்கினார். 1929ல் நாடு திரும்பி, 'வள்ளி திருமணம், கோவலன்' போன்ற நாடகங்களில் நடித்து, பெரும் புகழ் பெற்றார்.
பிரபல நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பாவை திருமணம் செய்தார். அடுத்த ஏழு ஆண்டுகளில் கிட்டப்பா இறந்தார்; அப்போது சுந்தராம்பாளுக்கு 25 வயது. அதன் பின், எந்த ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இவர் நடித்த, பக்த நந்தனார், அவ்வையார், பூம்புகார், திருவிளையாடல் படங்கள், பெரும் வெற்றி பெற்றன. நாட்டிலேயே முதன்முதலாக சட்டசபை மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை என்ற பெருமை பெற்றார். 'இசைப் பேரறிஞர், பத்ம ஸ்ரீ' உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 1980 செப்., 19ல் தன் 7௧வது வயதில் இறைவனடி சேர்ந்தார். கே.பி.சுந்தராம்பாள், காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X