பொது செய்தி

இந்தியா

கொரோனா சிகிச்சை கட்டமைப்பை பலப்படுத்த அறிவுறுத்தல்! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

Updated : செப் 20, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : 'கொரோனா தொற்று நிலைமையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். தொற்று பாதிப்புக்கு சிகிச்சையளிக்க சுகாதார உள் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பதுடன், மருத்துவத் துறையினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்' என, மாநில மற்றும்யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நம் நாட்டில் கொரோனா
கொரோனா சிகிச்சை ,கட்டமைப்பு, . அறிவுறுத்தல்! மாநில அரசுகள்,

புதுடில்லி : 'கொரோனா தொற்று நிலைமையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். தொற்று பாதிப்புக்கு சிகிச்சையளிக்க சுகாதார உள் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பதுடன், மருத்துவத் துறையினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்' என, மாநில மற்றும்யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா மூன்றாவது அலை அக்.,ல் பரவும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமாக இருந்தபோது மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைஅளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.மூன்றாவது அலை பரவினால் இது போன்ற பிரச்னை ஏற்படக் கூடாது என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.




தொடர்ந்து எச்சரிக்கை



இந்நிலையில் கொரோனா நிலைமை தொடர்பான உயர் மட்ட குழுவின் ஆய்வு கூட்டம் மத்திய அமைச்சக செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் நேற்று நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்த இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டில் கொரோனா பரவல் ஒழிந்து விடவில்லை. மூன்றாவது அலை பரவல் பற்றி மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பல முறை உச்சம் அடைந்துள்ளது. அதனால் தொற்று பரவலில் அலட்சியம் என்ற பேச்சுக்கே இடமில்லை.கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடித்தால் மட்டுமே மூன்றாவது அலை பரவினாலும் பெரும் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாகாரத்துறையினர் தங்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா நிலைமை பற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மூன்றாவது அலை பரவினால் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க தேவையான சுகாதார உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பதுடன் டாக்டர், நர்ஸ் உள்ளிட்ட மருத்துவத்துறையினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தீவிரப்படுத்த வேண்டும்



மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் பேசியதாவது:கொரோனா பரவலுடன் தற்போது டெங்கு காய்ச்சலும் பரவத் துவங்கிஉள்ளது. 11 மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடுகளுக்கான நடவடிக்கைளையும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலமாகவே பரவுகின்றன. அதனால் எந்த இடத்திலும் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறையும், துப்புரவுத்துறையும் மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டும்.டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பள்ளிகளில் சுகாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள், ரத்த வகைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


மாதம் 25 கோடி 'டோஸ்'



கொரோனாவை தடுக்க இந்த ஆண்டு இறுதிக்குள் 135 கோடி மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டம். இதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு மாதந்திர தடுப்பூசி கொள்முதலை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த மாதம் இதுவரை 20 கோடி டோஸ் கோவிஷீல்டு, 3.5 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இனி மாதந்தோறும் 25 கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


80.30 கோடி 'டோஸ்' தடுப்பூசி



மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: நாடு முழுதும் இதுவரை செலுத்திய தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 80.30 கோடியை கடந்துள்ளது. நேற்று முன்தினம்
மட்டும் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தியுள்ளதை உலக வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயம் என கூறலாம். இந்த மகத்தான சாதனை புரிந்த தேசத்திற்கு வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.ஆக., 27 மற்றும் 31, செப்., 6 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில், இரவு 9:00 மணி நிலவரப்படி, 85 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19-செப்-202119:46:59 IST Report Abuse
NicoleThomson இன்னும் ஆறுமாதத்தில் முடியும் என்று சொன்னாங்க , வடிவேலு மாதிரி ஆயிடுச்சே
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-செப்-202107:29:02 IST Report Abuse
Kasimani Baskaran 'வளர்ந்த' தமிழகத்தில்க்கூட பொதுமக்கள் சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் கூட கடைபிடிப்பதில்லை என்பது துரதிஷ்டவசமானது. பிறகு எப்படி நிலமை மேம்படும் என்று எதிர்பார்க்க முடியும்? பகுத்தறிவுள்ளோர் கண்டிப்பாக மற்றவர்களிடம் எடுத்துறைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X