சில வரி செய்திகள்...: இந்தியா

Added : செப் 18, 2021
Share
Advertisement
மெட்ரோ ரயில் விரிவாக்கம்புதுடில்லி: நாட்டின் பல்வேறு நகரங்களில் தற்போது 740 கி.மீ., மெட்ரோ ரயில் பாதைகள் பயன்பாட்டில் உள்ளன. இது 2022 இறுதிக்குள் 900 கி.மீ., ஆக உயரும் என நேற்று நடந்த டில்லி மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட விழாவில் பங்கேற்ற மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். இதுதவிர நாட்டில் மேலும் 1,000 கி.மீ., மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள்
 சில வரி செய்திகள்...: இந்தியா

மெட்ரோ ரயில் விரிவாக்கம்

புதுடில்லி: நாட்டின் பல்வேறு நகரங்களில் தற்போது 740 கி.மீ., மெட்ரோ ரயில் பாதைகள் பயன்பாட்டில் உள்ளன. இது 2022 இறுதிக்குள் 900 கி.மீ., ஆக உயரும் என நேற்று நடந்த டில்லி மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட விழாவில் பங்கேற்ற மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். இதுதவிர நாட்டில் மேலும் 1,000 கி.மீ., மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வாலிபர் எரித்துக்கொலை

சாகர்: மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு பெண்ணை, 25 வயது நபர் காதலித்துள்ளார். ஆத்திரம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பலியானார். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் கொலை

கவுஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் கோக்ராஜர் மாவட்டம் உல்டபானி பகுதியில் யு.எல்.பி., என்ற பெயரில் சிலர் புதிய பயங்கரவாத அமைப்பை துவக்கி உள்ளனர். இதுகுறித்த 'வீடியோ'வை சமீபத்தில் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். உடனடியாக பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை த் துவங்கினர். நேற்று முன்தினம் இரு பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அனில் தேஷ்முக் மீது வழக்கு

மும்பை: மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை யினர், விசாரணைக்கு ஆஜராகும்படி பலமுறை 'சம்மன்' அனுப்பினர். அவர் ஆஜராகவில்லை. இதனால் அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

விபத்தில் 3 குழந்தைகள் பலி

பலன்பூர்: குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் அம்பாஜியில் உள்ள கோவிலுக்கு அப்பகுதி மக்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இதன்படி ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் அம்பாரா கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று அதிகாலை பாதயாத்திரை சென்றனர். பலன்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நரேஷ் தாமோர், 16, ஹரீஷ் தாமோர், 15, ரேஷ்மி, 12, ஆகியோர் பலியாயினர்.

போலி நக்சல்கள் கைது

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும், 76 வயது டாக்டருக்கு சமீபத்தில் ஒரு கடிதம் வந்தது. அதில், 50 லட்சம் ரூபாய் தராவிடில் அவரையும், அவரது மகனையும் கொன்று விடுவதாக நக்சல்கள் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஒரு பெண் உட்பட மூவரை கைது செய்தனர். அவர்கள் 'யு டியூப் வீடியோ' பார்த்து நக்சல்கள் போல் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்ததாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X