ஜி.எஸ்.டி., இழப்பீடு தொடர எதிர்க்கட்சிகள், ஆளும் மாநிலங்கள் கோரிக்கை

Updated : செப் 20, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி:'ஜி.எஸ்.டி., இழப்பீடு தொடர வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2017 ஜூலை முதல் ஜி.எஸ்.டி., அமலில் உள்ளது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை மத்திய
ஜி.எஸ்.டி., இழப்பீடு தொடர கோரிக்கை

புதுடில்லி:'ஜி.எஸ்.டி., இழப்பீடு தொடர வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2017 ஜூலை முதல் ஜி.எஸ்.டி., அமலில் உள்ளது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆடம்பரப் பொருட்கள், புகையிலை, சிகரெட் போன்ற உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்குவதற்கான கெடு 2022 ஜூனுடன் முடிவடைகிறது. அதன் பின் 2026 வரை ஆடம்பரப் பொருட்களுக்கு தொடர்ந்து கூடுதல் வரிவசூலிக்கப்படும். இத்தொகை நடப்பு நிதியாண்டு வரை மாநிலங்களின் ஜி.எஸ்.டி., இழப்பீட்டிற்காக பெறப்பட்டுள்ள கடனுக்கு ஈடு செய்யப்படும்.இதற்கு 43வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார். இந்நிலையில் 'மாநிலங்களுக்கு வழங்கும் ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்குநீட்டிக்க வேண்டும்' என, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-செப்-202115:12:25 IST Report Abuse
sankaseshan PKN மாநிலங்கள் GST வருமானத்தை இழக்க தயாரில்லை அப்பதான் மத்தியஅரசு மீது பெட்ரோல் விலை உயர்வுக்கு பழி போடலாம் நம்மவூரு திராவிடர்கள் நிதி நெருக்க இருக்கும் போதும் விமானம் வாங்கறானுங்க , BJP ஐ வாய் கிழிய திட்டுவானுங்க
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
19-செப்-202110:15:51 IST Report Abuse
Mirthika Sathiamoorthi 2022க்குள் கொடுக்கவேண்டிய GST இழப்பேடு கொடுக்க மாட்டார்களாம். GST வசூல் சாதனைன்னு பத்திரிக்கை கொண்டாடுச்சே? அவ்வளவு காசுவந்தும் இழப்பீடு கொடுக்க முடியாதுன்னா? புரியலையே? அதுமட்டுமா? பெட்ரோல் டீசல் மீதான GST வரிவிதிப்புக்கு இந்த கூட்டத்தொடரில் ஆலோசனைன்னு கடந்த தபா ஒரு செய்தி போட்டுச்சு...அது என்னாச்சுன்னு பூதக்கண்ணாடி வச்சு இங்கே தேடிப்பாத்து கிடைக்கலே? யாராச்சும் சொல்லுங்கப்பா அது என்னாச்சு?
Rate this:
19-செப்-202115:37:59 IST Report Abuse
ஆரூர் ரங்ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய உறுப்பினர்கள் வளைகாப்பு🥲 வைபவங்களில் ரொம்ப பிசி. என்ன செய்ய? அதற்குதான் ஓட்டுப் போட்டு பதவி கொடுத்தாங்க😛 உ.பி ஸ்...
Rate this:
19-செப்-202115:58:22 IST Report Abuse
ஆரூர் ரங்ஜிஎஸ்டி மீட்டிங் எல்லாம் நாங்க பாத்துக்கறோம்....
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
19-செப்-202108:46:10 IST Report Abuse
Raj இலவசத்தை கை விடுங்கள் எல்லாம் சரி செய்யலாம். நாடும் முன்னேறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X