அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சட்டத்திற்குட்பட்டு செயல்படுவேன்!' பதவியேற்ற தமிழக கவர்னர் அறிவிப்பு

Updated : செப் 20, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (10+ 86)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தின் புதிய கவர்னராக, ஆர்.என்.ரவி நேற்று பொறுப்பேற்றார். பதவியேற்பு விழா முடிந்ததும், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ''இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன்,'' என்று உறுதி அளித்தார்.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும்,
சட்டத்திற்கு,செயல்படுவேன்!' பதவியேற்ற தமிழக கவர்னர் அறிவிப்பு

சென்னை :தமிழகத்தின் புதிய கவர்னராக, ஆர்.என்.ரவி நேற்று பொறுப்பேற்றார். பதவியேற்பு விழா முடிந்ததும், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ''இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவேன்,'' என்று உறுதி அளித்தார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், நாகாலாந்து மாநில முன்னாள் கவர்னருமான ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

பதவியேற்பு விழா நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது. கொரோனா காரணமாக, திறந்தவெளியில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.காலை 10:30 மணிக்கு கவர்னர் மாளிகை வரவேற்பு அறையில் இருந்து, புதிய கவர்னரை முதல்வர் ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி ஆகியோர், விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.


பதவிப் பிரமாணம்மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி, முதல்வர் ஸ்டாலின், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, தலைமை செயலர் இறையன்பு, கவர்னரின் செயலர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஆகியோர் அமர்ந்தனர்.தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி முடித்ததும், தலைமைச் செயலர் இறையன்பு, கவர்னரிடம் பதவியேற்பு உரிமை ஆணையை பெற்று வாசித்தார். அதன் தொடர்ச்சியாக, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, புதிய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


பதவி யேற்புஉறுதிமொழி வாசித்து, கவர்னர் பதவியேற்றார். புதிய கவர்னருக்கும், அவரது மனைவிக்கும், முதல்வர் ஸ்டாலின் புத்தகங்கள் பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தலைமை நீதிபதி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.அதன்பின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி.செழியன் ஆகியோரை, கவர்னருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். அனைவரும் பொன்னாடை, புத்தகம், பூங்கொத்து போன்றவற்றை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

அடுத்து தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளை, கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் முருகன், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வைத்தி லிங்கம், கே.பி.முனுசாமி, தங்க மணி, வேலுமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தமிழகத்தால் அதிகம் பலன்அவர்களை தொடர்ந்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், த.மா.கா., தலைவர் வாசன், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, எம்.பி., பாரிவேந்தர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்பு விழா முடிந்ததும், பத்திரிகையாளர்களை சந்தித்த கவர்னர், 'வணக்கம்' என்று தமிழில் கூறினார். பின், அவர் அளித்த பேட்டி:மிகவும் பழமை வாய்ந்த கலாசாரம் மற்றும் தொன்மையான நாகரிகம் உடைய சமுதாயம் வாழ்ந்த இடத்திற்கு வந்துள்ளதற்கும், தமிழக மக்களை சந்திப்பதிலும் மகிழ்ச்சி.

இந்தியா, தமிழகத்தால் அதிகம் பலன் அடைந்துள்ளது. அறிவு சார்துறை, ஆன்மிகம், அரசியல் என, அனைத்து துறைகளிலும் பலன் அடைந்துள்ளது. இப்பகுதி மக்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி உள்ளனர். தமிழக மக்களுக்கு என்னால் முடிந்த அளவு, இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு, சேவை செய்வேன். பார்லிமென்ட், ஜனநாயகம் செயல்பட, ஊடகங்களின் பங்கு முக்கியம்.நீங்கள் இந்த மண் மற்றும் மக்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக திகழ்கிறீர்கள். என் பொறுப்பை நிறைவேற்ற, உங்களுடைய செய்தி மற்றும் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.தமிழ் மொழியை கற்க முயற்சிக்கிறேன். மிகவும் பழமையான மொழி. பத்திரிகை துறையில் குறைந்த கால அனுபவமே எனக்கு உண்டு. தமிழக மக்களுக்கு பணியாற்றுவது சவாலுக்கு அப்பாற்பட்டது.


கருத்து கூற அவகாசம் தேவைஇது, எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு. இங்கு புகழ்பெற்ற அரசு உள்ளது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.கவர்னர், அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு செயல்பட முடியும். கவர்னருக்கென சில விதிமுறைகள் உள்ளன; அதன்படி செயல்படுவேன். தமிழக rஅரசின் செயல்பாடு குறித்து, கருத்து கூற அவகாசம் தேவை.கொரோனாவை கட்டுப்படுத்த, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் இணைந்து, கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. தமிழகத்திற்கு என்னால் முடிந்த பணிகளை செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.


காங்., - கம்யூ., புறக்கணிப்பு!தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.கவர்னர் பதவியேற்பு விழாவிற்கு, அழகிரி, திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.

விழா அரங்கில் இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. ஆனால், அவர்கள் வரவில்லை. அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிஎம்.எல்.ஏ., ஹசன் மவுலானா மட்டும் பங்கேற்றார். அவர், கவர்னர் மாளிகை அமைந்துள்ள வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ., என்பது குறிப்பிடத்தக்கது.


ஒத்திகையால் குழப்பம்!கவர்னர் பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாட, பெண்கள்வரவழைக்கப்பட்டிருந்தனர்.விழா துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த 'மைக்'கில், அவர்களை தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடும்படி அதிகாரிகள் கூறினர்; அவர்களும் பாடினர்.

அங்கிருந்த அனைவரும் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் மைக்கில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடியது, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர்கள் சரியாக பாடுகின்றனரா என ஒத்திகை பார்க்க விரும்பி இருந்தால், மைக் இல்லாமல் பாடச் சொல்லி இருக்கலாம். அதை விடுத்து, மைக்கில் பாட வைத்ததோடு, தேசிய கீதம் பாடுகின்றனரே என்ற உணர்வே இல்லாமல் அதிகாரிகள் செயல்பட்டதும், அதிர்ச்சி அடைய வைத்தது.

Advertisement
வாசகர் கருத்து (10+ 86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
19-செப்-202118:42:13 IST Report Abuse
DVRR 'சட்டத்திற்குட்பட்டு செயல்படுவேன்' அப்போ திராவிஷ அரசுக்கு எதிராக செயல்படுவேன் என்று நாசூக்காக சொல்வது போலவே இருக்கின்றது இது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-செப்-202115:33:26 IST Report Abuse
sankaseshan என்னப்பா Rajas திருட்டு திமுக கோவில்களுக்கு தன்னலமற்ற சேவை செய்யுதா? புதுசா இருக்கே, தன்னலமும் திமுகவும் பிரிக்க முடியாதவை கோவில் வருமானத்தில் ஆறம் இல்லாத துறை ஆடம்பர செலவு செய்து சந்திஷமாக இருக்கிறார்கள் ஆகம விதிகளை மதிக்காமல் மீருமிறார்கள் ஏற்கனவே போலி நகைகளை வைத்து அசலை ஆட்டையை போட்டாச்சு. கோவில் நிலங்களை பட்டா போட்டு கபளீகரம் பண்ணியாவது நீ சர்டிபிகேட் கொடுக்குறே கடவுளுக்கு தொண்டு செய்ப்பவர்கள் கஷ்ட படுகின்றனர்
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
19-செப்-202113:50:49 IST Report Abuse
Nesan சட்டம் தன கடமையை செய்யும், பொறுத்திருந்து பார்க்கலாம்... ஒரு உள்நோக்கத்துடன் இவர் தமிழகம் வந்துள்ளார் என்பது உலகு அறிந்த உண்மை. மக்கள் சேவையை தொடர வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X