ஆப்கனில் வெடிகுண்டுத் தாக்குதல்; இருவர் பலி, பலர் படுகாயம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில் முன்னதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து அங்கு தாலிபான் அரசு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து வந்துள்ளது. அவ்வப்போது ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத குழுக்களால் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான ஜலாலாபாத் நகரில் வெடிகுண்டு

ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில் முன்னதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து அங்கு தாலிபான் அரசு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து வந்துள்ளது.



latest tamil news



அவ்வப்போது ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத குழுக்களால் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான ஜலாலாபாத் நகரில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் ஆகியோரும் அடக்கம். இதுகுறித்து தாலிபான் அரசு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.


latest tamil news



அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை அடுத்து நடைபெற்ற முதல் வன்முறைத் தாக்குதல் இதுவே ஆகும். தாலிபான்களுக்கு எதிராக செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்குமா என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.kumaresan - Chennai,இந்தியா
19-செப்-202115:04:21 IST Report Abuse
g.kumaresan என்றோ ஒரு நாள் இந்தியாவை கொள்ளை அடித்த கும்பல்.இன்று அந்த நாடே கொள்ளை போகிறது.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
19-செப்-202108:30:04 IST Report Abuse
suresh kumar அந்நிய ஆதிக்க சக்திகள்தான் வெளியேறிவிட்டனவே பின்னும் ஏன் வன்முறை, வெடிகுண்டு? பலியானவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உங்கள் இனம் சார்ந்த அப்பாவிகள்தானே?
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
19-செப்-202108:27:25 IST Report Abuse
elakkumanan மயான அமைதியை நோக்கி.. கூலிபான் கும்பல் போகலாமே.. மோடி அவர்களின் தொடர்பு இல்லாத, தமிழ் காவல் கும்பலின் பாராட்டுக்குரிய புண்ணிய ஆட்சியை தரிசித்து (உசுரோட இருந்தா) வரலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X