அரை மணி நேரத்திற்குள் மூதாட்டிக்கு 2 'டோஸ்'

Added : செப் 18, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரளாவில் மூதாட்டிக்கு அரை மணி நேரத்திற்குள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களும் செலுத்தப்பட்டன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு

திருவனந்தபுரம்:கேரளாவில் மூதாட்டிக்கு அரை மணி நேரத்திற்குள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களும் செலுத்தப்பட்டன.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ள, தண்டம்மா பாப்பு, 84, என்ற முதாட்டி தன் மகனுடன் சென்றார். தடுப்பூசி செலுத்திய அந்த மூதாட்டி, தன் காலணியை மறந்து அறைக்கு உள்ளேயே விட்டுச் சென்றார். பின், ஞாபகம் வந்ததும் காலணியை அணிந்துவர அறைக்குள் சென்ற அவரை, அங்கிருந்த ஒரு செவிலியர், நாற்காலியில் அமர வைத்து மீண்டும் தடுப்பூசியை செலுத்தி உள்ளார்.

மூதாட்டியை பேச விடாமல், தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.வெறும் 30 நிமிடங்களுக்குள் இரண்டு டோஸ்களும் மூதாட்டிக்கு செலுத்தப்பட்டது தெரியவந்ததும், அவரை ஒரு மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் டாக்டர்கள் வைத்திருந்தனர். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்ததால், வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.அரசு சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த மூதாட்டியிடம் போனில் உடல் நலம் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X