எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பாலியல், குழந்தை திருமணம் செய்வோரை பிடிக்க தயக்கம்: போலீசால் சிறுமி பாதுகாப்பிற்கு கேள்விக்குறி

Updated : செப் 19, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழகத்தில் அதிகளவில் குழந்தை, சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடக்கும் பட்டியலில் சிவகங்கை மாவட்டமும் உள்ளது. இது போன்ற வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம், குழந்தை கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு, சைல்டு லைன், சமூக நலத்துறை மூலம் கண்காணிப்பு என பல அமைப்புகள் ஏற்படுத்தியுள்ளனர். இவ்வளவு கண்காணிப்பு இருந்தும் பெற்றோர் கவனமின்மை மற்றும்
பாலியல், குழந்தை திருமணம் செய்வோரை பிடிக்க தயக்கம்: போலீசால் சிறுமி பாதுகாப்பிற்கு கேள்விக்குறி

தமிழகத்தில் அதிகளவில் குழந்தை, சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடக்கும் பட்டியலில் சிவகங்கை மாவட்டமும் உள்ளது. இது போன்ற வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம், குழந்தை கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு, சைல்டு லைன், சமூக நலத்துறை மூலம் கண்காணிப்பு என பல அமைப்புகள் ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வளவு கண்காணிப்பு இருந்தும் பெற்றோர் கவனமின்மை மற்றும் கிராமத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் இதுபோன்று குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றம், குழந்தை திருமணம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைக்கின்றனர்.பாலியல் குற்ற சம்பவம் 62கவனக்குறைவால் மாவட்டத்தில் 2021 ஜன., முதல் செப்.15 வரை மட்டுமே குழந்தை, சிறுமிகளுக்கு எதிராக 62 பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

சமூக நலத்துறை சார்பில் எவ்வளவு விழிப்புணர்வு அளித்தாலும் பொருளாதார நிலை, குடும்ப சொத்துக்கள் தங்களுக்குள் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பெற்றோரே 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர்.2021 ஜன., முதல் செப்., வரை 6 குழந்தை திருமணம் நடந்துள்ளன. குறிப்பாக சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், மானாமதுரையில் தான் குழந்தை திருமணம் அதிகம். இது குறித்து வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர்கள் மகளிர் போலீசில் புகார் செய்கின்றனர்.

ஆனால் போலீசார் புகாரில் தெரிவித்த அனைத்து நபர்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தான் ஈடுபடுகின்றனர்.கடமைக்காக வழக்குஇது வரை நடந்த குழந்தை திருமணங்களில் குற்றவாளிகள் மீது வழக்கு மட்டுமே பதிந்து கடமை முடிந்ததாக போலீசார் நினைக்கின்றனர். குறிப்பாக குழந்தை திருமணம் செய்தவர்கள் குறித்த தகவல்களை மறைத்து அவர்களுக்கு ஆதரவாக தான் செயல்படுகின்றனர். இதனால் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

எனவே மகளிர் போலீசார் நேர்மையாக இருந்து பாதித்த சிறுமிக்கு ஆதரவாக குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்கால பெண் சமுதாயம் பாதுகாக்கப்படும்.சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் கூறியதாவது: இது குறித்து உரிய விசாரணை செய்து தவறு செய்யும் மகளிர் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
21-செப்-202112:12:30 IST Report Abuse
JeevaKiran ஆனால் போலீசார் புகாரில் தெரிவித்த அனைத்து நபர்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தான் ஈடுபடுகின்றனர்.- இதனால்தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன.-சிவகங்கை எஸ்.பி., கூறியதாவது: இது குறித்து உரிய விசாரணை செய்து தவறு செய்யும் மகளிர் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.- அப்போ இத்தனை நாளாக இதுபோன்றவைகள் இவர்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும்?
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
20-செப்-202119:15:07 IST Report Abuse
Ram அரசு, குடும்ப விஷயத்தில் வன்முறை இருந்தால் மட்டுமே தலையிடனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X