சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விசாரணையால் பரபரப்பு

Updated : செப் 19, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
விழுப்புரம் அருகே ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அடுத்த காணை யூனியனுக்குட்பட்ட சித்தேரி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு ஐந்து பேருக்கு மேல் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதில், யார் அதிக பணம் தருகிறார்களோ அவரையே பொதுமக்கள் ஓட்டு போட்டு வெற்றியடைய செய்ய வேண்டும் என அங்குள்ள ஊர்
 ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விசாரணையால் பரபரப்பு

விழுப்புரம் அருகே ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அடுத்த காணை யூனியனுக்குட்பட்ட சித்தேரி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு ஐந்து பேருக்கு மேல் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இதில், யார் அதிக பணம் தருகிறார்களோ அவரையே பொதுமக்கள் ஓட்டு போட்டு வெற்றியடைய செய்ய வேண்டும் என அங்குள்ள ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டது.ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஏலம் நேற்று நடந்தது.

1 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கிய ஏலம், வெள்ளேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, 14 லட்சம் ரூபாய்க்கு முடிவு செய்யப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம இளைஞர்கள் சிலர், முறையாக தேர்தலை நடத்த கோரி காணை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.அப்போது, 'முறையாக ஊராட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்' என எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
19-செப்-202116:20:38 IST Report Abuse
BASKAR TETCHANA விடியல் ஆட்சியில் விலைக்கு போகாதவர்கள் யார். ஆட்சித்தலைவரும் போலீசாரும் அதிகாரிகளும் ஒழுங்கை அவர்கள் வேலையை செய்தால் இது போன்ற காரியங்கள் நடக்காது. ஆட்சித்தலைவரில் இருந்து பியூன் வரை தேர்தலுக்கு வேலை செய்யவில்லை. தி.மு.க. காரன் போடும் பிச்சைக்காசுக்கு வேலை செய்கிறான். இனிமேல் யாரும் பயப்பட வேண்டாம். ஏதுவாய் இருந்தாலும் ஆளுநருக்கு ஒரு கடிதம் அனுப்பி விடுங்கள் அது போதும். பின்னாடி பாருங்கள் அவனவன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுவார்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-செப்-202110:46:43 IST Report Abuse
duruvasar விடியல் வந்தாச்சு. இதைவிட வெளிப்படைத்தன்மையாக எவருடைய ஆட்சியிலும் நடக்கவிடவில்லை. தமிழன் தலைநிமிர்ந்து விட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X