சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூணாறில் போக்குவரத்து தடை ஏற்படுத்திய 'படையப்பா'

Added : செப் 18, 2021
Share
Advertisement
மூணாறு--கேரளா மூணாறு --உடுமலைப்பேட்டை ரோட்டில் கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆண் காட்டு யானை படையப்பா அரை மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்படுத்தியும் பயணிகள் சந்தோசத்தில்பொறுமை காத்தனர்.மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் அனைவராலும் படையப்பா என அழைக்கப்படும் வயது முதிர்ந்த ஆண் காட்டு யானைமிகவும் பிரபலம். அந்த யானை இரை தேடி ரோட்டோரக்
 மூணாறில் போக்குவரத்து தடை ஏற்படுத்திய 'படையப்பா'

மூணாறு--கேரளா மூணாறு --உடுமலைப்பேட்டை ரோட்டில் கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆண் காட்டு யானை படையப்பா அரை மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்படுத்தியும் பயணிகள் சந்தோசத்தில்பொறுமை காத்தனர்.

மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் அனைவராலும் படையப்பா என அழைக்கப்படும் வயது முதிர்ந்த ஆண் காட்டு யானைமிகவும் பிரபலம். அந்த யானை இரை தேடி ரோட்டோரக் கடைகளை குறி வைத்து வலம் வரும் என்பதால்அதனை தேடி சுற்றுலாப்பயணிகள் தினமும் வருவர். குறிப்பாக மூணாறு-- உடுமலைப்பேட்டை ரோட்டில் படையப்பாவை காணலாம்.அந்த வழித்தடத்தில் கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரோட்டில் வலம் வந்த யானையை இருட்டில் தெரியாமல் வாகனங்களில் பயணித்த ஏராளமானோர் அருகில் சென்ற பிறகே பார்த்தனர்.இரை தேடிய படையப்பா வாகனங்கள் சென்றதை பெரிதுபடுத்தவில்லை. இருப்பினும் அரை மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்படுத்தியும் படையப்பாவை பார்த்த சந்தோசத்தில் பயணிகள் பொறுமை காத்தனர்.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X