30 நிமிடம் மட்டுமே தூங்கும் ஜப்பானின் அதிசய இளைஞர்| Dinamalar

30 நிமிடம் மட்டுமே தூங்கும் ஜப்பானின் அதிசய இளைஞர்

Updated : செப் 19, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (1)
Share
டோக்கியோ :கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்கும் இளைஞர் ஜப்பானில் வசிக்கிறார். கிழக்காசிய நாடான ஜப்பானைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி, 36. இவர் 'ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோஸியேஷன்' தலைவராக பதவி வகிக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் துாங்குகிறார். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி
30 நிமிடம் ,துாங்கும் ஜப்பான் அதிசய இளைஞர்

டோக்கியோ :கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்கும் இளைஞர் ஜப்பானில் வசிக்கிறார். கிழக்காசிய நாடான ஜப்பானைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி, 36. இவர் 'ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோஸியேஷன்' தலைவராக பதவி வகிக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் துாங்குகிறார்.

இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார். துாங்கும் நேரத்தை குறைப்பது குறித்து நுாற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தும் வருகிறார். இதுகுறித்து தைசுகே ஹோரி கூறியதாவது:எல்லாரையும் போல நானும் எட்டு மணி நேரம் தான் துாங்கிக் கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன.

எனவே துாங்கும் நேரத்தை குறைக்க துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே துாங்குகிறேன்.சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட துாங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X