நாளிதழ் நிருபர் கைது: ஆசிரியர் மீது வழக்கு ஹரியானா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Added : செப் 18, 2021
Share
Advertisement
அம்பாலா:ஹரியானாவில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டது தொடர்பான செய்தியில் நேர்ந்த தவறுக்காக நாளிதழ் நிருபர் கைது செய்யப்பட்டார். நாளிதழ் செய்தி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்பாலா அருகே மர்தோன் சாஹிப் கிராமத்தில் சமீபத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக

அம்பாலா:ஹரியானாவில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டது தொடர்பான செய்தியில் நேர்ந்த தவறுக்காக நாளிதழ் நிருபர் கைது செய்யப்பட்டார்.

நாளிதழ் செய்தி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்பாலா அருகே மர்தோன் சாஹிப் கிராமத்தில் சமீபத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக பயங்கரவாதி ஒருவர் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி, 'தைனிக் பாஸ்கர்' நாளிதழில் அம்பாலா கன்டோன்மென்ட் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டிப்போ அருகே பயங்கரவாதி கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. மறுநாள் திருத்தம் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தைனிக் பாஸ்கர் நாளிதழின் செய்தி ஆசிரியர் சந்தீப் ஷர்மா, நிருபர் சுனில் பிரார் ஆகியோர் மீது அம்பாலா கன்டோன்மென்ட் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

நிருபர் சுனில் கைது செய்யப்பட்டார். சுனிலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.செய்தி ஆசிரியர் சந்தீப் ஷர்மாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, அம்பாலா கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறியதாவது:ஆதாரமற்ற தகவல்களை நாளிதழில் வெளியிட்டு பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது உட்பட நான்கு பிரிவுகளில் தைனிக் பாஸ்கர் நாளிதழின் செய்தி ஆசிரியர் மற்றும் நிருபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ததற்கும், கைது நடவடிக்கைக்கும் ஹரியானா மாநில அரசுக்கு காங்கிரஸ், ஹரியானா ஜனநாயக முன்னணி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X