சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழை நீரில் கார் சிக்கி அரசு பெண் டாக்டர் பலி

Added : செப் 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுக்கோட்டை:ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரில், கார் சிக்கி அரசு மருத்துவமனை பெண் டாக்டர் உயிரிழந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், துடையூரில் ஆளில்லா ரயில்வே கேட்டை, பொதுமக்கள் கடந்து செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் சுரங்கப் பாதையில், 3 அடி உயரத்திற்கும் அதிகமான தண்ணீர் தேங்கியிருந்தது. துடையூர்
 மழை நீரில் கார் சிக்கி அரசு பெண் டாக்டர் பலி

புதுக்கோட்டை:ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரில், கார் சிக்கி அரசு மருத்துவமனை பெண் டாக்டர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், துடையூரில் ஆளில்லா ரயில்வே கேட்டை, பொதுமக்கள் கடந்து செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் சுரங்கப் பாதையில், 3 அடி உயரத்திற்கும் அதிகமான தண்ணீர் தேங்கியிருந்தது. துடையூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், 40 இவரது மனைவி சத்யா, 35; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வந்தார்.

மாமியார் ஜெயம், 60 என்பவருடன் சத்யா காரில் துடையூருக்கு வந்தார்.இரவு 11:00 மணியளவில் ரயில்வே சுரங்க பாதையை, கார் கடக்க முயன்ற போது, அங்கு தேங்கி இருந்த மழை நீரில் கார் மூழ்கியது. ஜெயம் கார் கதவை திறந்து வெளியேறி விட்டார். சத்யா சீட் பெல்ட் அணிந்து இருந்ததால், காரில் இருந்து, உடனடியாக வெளியே வர முடியவில்லை.இதை அறிந்த அந்த பகுதி மக்கள், கார் கதவை உடைத்து சத்யாவை மீட்டனர். இருவருரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் சத்யா இறந்தார். ஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார்.வெள்ளனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயில்வே ஆணையர் ஆய்வு:துடையூருக்கு வந்த மதுரை மண்டல ரயில்வே பயணியர் பாதுகாப்பு ஆணையர் அன்பரசு, பெண் டாக்டர் பலியான சுரங்க பாதை பாலத்தை பார்வையிட்டார். பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அன்பரசு கூறும்போது, ''ரயில்வே சுரங்கப் பாதை மற்றும் இங்கு நடந்த சம்பவம் பற்றி, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்படும். பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்'' என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
20-செப்-202111:25:03 IST Report Abuse
வால்டர் ஒரு ஆளுயர கட் அவுட் போன்ற ஒன்றை வைத்து நீரின் அளவை அறிந்து கொள்ளலாம். reflector எல்லா இடங்களிலும் இப்பொழுது பயன்பாட்டில் உள்ளது. கட் அவுட்டில் இதை பதித்தால் இன்னும் எளிது. தேசிய நெடுஞ்சாலைகளில் அவசியம் இருக்காது. அங்கே முன்னேற்பாடுகள் இருக்கும். மாநில நெடுஞ்சாலைகளில் அவசியம் இவை. சாலைகள், பாலங்கள் அமைப்புகள் பொது மக்கள் போக்குவரத்து முன்னேற்றத்திற்காகவே அன்றி உயிரை குடிப்பதற்கு அல்ல. பொதுமக்களும் அவசர பிரயாணங்களை கவனத்துடன் கையாள வேண்டும்.
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
19-செப்-202110:32:40 IST Report Abuse
W W இந்த சம்பவம் நம் நட்டில் நடந்து இருப்பது மிகவும் கேவலமான ஒன்றூ இதில் கவணிக்கபட வேண்டியது Automatic Storm water Dewatering Pump ஒன்று இருக்கிராதா அது இருநால் இது மாதிறி சோக சம்பவம் நடந்திறுக்க வாய்பே இல்லை .இனியவது அதற்குறிய டிப்பர் மென்ட் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டி கோள் அவரின் இழப்புக்கு பல கோடி கொடுத்தாலும் பலன் இல்லை.அரசு இதனை விரைவில் சிரியெச்சக நடவடிக்கை எடுக்க வேண்டும். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X