கல்குவாரியில் ஒப்பந்ததாரர்கள் கொள்ளை

Added : செப் 19, 2021
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடகாவில் சட்ட விரோத கல்குவாரி தொழில் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கும், ஒப்பந்ததாரர்கள் இனியும் சட்டவிரோதமாக செயல்பட்டால் சிக்குவது உறுதி. குவாரி முறைகேட்டை கண்டுபிடிக்க 'ட்ரோன்' பயன்படுத்த சுரங்கம், நில ஆய்வியல் துறை தயாராகி வருகிறது.கர்நாடகாவில் சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகள் நிர்ணயித்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து

பெங்களூரு : கர்நாடகாவில் சட்ட விரோத கல்குவாரி தொழில் மூலம், கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கும், ஒப்பந்ததாரர்கள் இனியும் சட்டவிரோதமாக செயல்பட்டால் சிக்குவது உறுதி.

குவாரி முறைகேட்டை கண்டுபிடிக்க 'ட்ரோன்' பயன்படுத்த சுரங்கம், நில ஆய்வியல் துறை தயாராகி வருகிறது.கர்நாடகாவில் சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகள் நிர்ணயித்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து கல்குவாரி தொழிலுக்கு அனுமதியளிக்கின்றனர். 5 ஏக்கர் பகுதியில் கல்குவாரி நடத்த அனுமதி பெறும் ஒப்பந்ததாரர்கள், பத்து ஏக்கருக்கும் அதிகமான பகுதிகளில், சட்டவிரோதமாக நடத்துகின்றனர்.விதிமுறை வகுப்புஓராண்டில் நிர்ணயித்த அளவில் கல், இரும்புத்தாது, மணல் உட்பட மற்ற கனிமங்களை அள்ள வேண்டும் என, விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனம் போனபடி கல்குவாரி நடத்தும் ஒப்பந்ததாரர்கள் சட்ட விரோதமாக சம்பாதிக்கின்றனர். அரசுக்கு சரியாக வரியும் செலுத்தாமல் மோசடி செய்கின்றனர்.உரிமம் பெற்றுள்ள ஒப்பந்தாரர்கள், உரிமத்தை விதிமுறைப்படி புதுப்பிப்பதும் இல்லை. இவர்களால் அரசுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய ஒப்பந்ததாரர்களுக்கு கடிவாளம் போட சுரங்கம், நில ஆய்வியல்துறை திட்டமிட்டுள்ளது.சட்டவிரோத கல்குவாரி தொழிலை தடுக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும், 'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்ய, தயாராகி வருகிறது. இதற்காக அரசிடம் கோரிக்கை அனுப்பியுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்குமென அதிகாரிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.தகவலறியும் வாய்ப்புஇது தொடர்பாக, சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரியொருவர் கூறியதாவது:மாநிலத்தில் சட்டவிரோத கல்குவாரி தொழிலை, கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். முதன் முறையாக 'ட்ரோன்' மூலம், ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இதனால் மாநிலத்தில் எந்தெந்த மூலைகளில் கல்குவாரி தொழில் நடக்கிறது என்ற தகவல் கிடைக்கும். நடவடிக்கை எடுக்கவும் உதவியாக இருக்கும்.சட்டவிரோத கல்குவாரி தொழிலை கட்டுப்படுத்த, சுரங்கம், நில ஆய்வியல்துறை, 'ஒன் ஸ்டேட் ஒன் ஜிபிஎஸ்' திட்டத்தை செயல்படுத்த தயாராகிறது. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். விரைவில் அனுமதி கிடைக்கும்.இரும்புத்தாது, கற்கள், மணல் உட்பட அனைத்து விதமான கனிமங்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு, ஜி.பி.எஸ்., சாதனம் பொருத்தும் பணிகள் துவங்கும். மாநிலத்தின் சில மாவட்டங்களில், ஏற்கனவே லாரிகளுக்கு ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்டுள்ளது.ஆனால் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதி இல்லாததால் சட்டவிரோத கல்குவாரி தொழில் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.குற்றச்சாட்டு சில லாரிகளில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ்., சாதனங்களை எடுத்துவிட்டு உரிமையாளரகள் கனிமங்களை கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே கனிமங்களை கொண்டு செல்ல பதிவு செய்து கொண்டுள்ள 2 லட்சம் லாரிகளுக்கு அதிநவீனமான ஜி.பி.எஸ்., சாதனம் பொருத்த துறை திட்டமிட்டுள்ளது. இந்த சாதனங்கள் பொருத்தினால் முறைகேட்டை தடுக்கலாம்.2,802 கல்குவாரிகள்மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதி பெற்ற பின் 20 ஆண்டு, 30 ஆண்டு ஒப்பந்தம் என இரண்டு விதமாக அனுமதியளிக்கப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் 13 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் 2,802 அதிகாரப்பூர்வ கல்குவாரிகள் செயல்படுகின்றன.மாநிலம் முழுவதும், 2014 -- 15 முதல் 2020 -- 21 வரை, சட்டவிரோத கல்குவாரி தொழில் தொடர்பாக, 17 ஆயிரத்து 386 வழக்குகள் பதிவாகியுள்ளது. 146 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X