'நேரில் ஆஜராகும்படி உத்தரவிட உறுதியான ஆதாரங்கள் தேவை': உச்ச நீதிமன்றம்

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி-'உறுதியான ஆதாரமின்றி யாரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.கடந்த 2015ல், உ.பி.,யைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கார் டிரைவரின் மனைவி, விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனு

புதுடில்லி-'உறுதியான ஆதாரமின்றி யாரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.



latest tamil news


கடந்த 2015ல், உ.பி.,யைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கார் டிரைவரின் மனைவி, விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், தன் கணவரை, முதலாளி ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து விட்டதாக கூறி, அவரை விசாரிக்கும்படி கோரிஇருந்தார்.விசாரணை நீதிமன்றம் ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா நேரில் ஆஜராகும்படி 'சம்மன்' அனுப்பியது. இதை எதிர்த்து ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு அளித்த தீர்ப்பு: ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்படாத நபர் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.அதேசமயம் அந்த நபர் குற்றம் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் அல்லது சாட்சிகள் இருந்தால் மட்டுமே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 'வாரன்ட்' பிறப்பிக்க முடியும். எந்தவொரு ஆதாரமும் இன்றி சாதாரணமாக ஒருவரை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இது குறித்து, 2014ல் ஹர்தீப் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்து உள்ளது.


latest tamil news


இதை ஆராயாமல் விசாரணை நீதிமன்ற நீதிபதி, எந்தவித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாத நிலையில், மனுதாரரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
19-செப்-202118:59:25 IST Report Abuse
DVRR சாதாரணன் என்றால் நிச்சயம் ஆஜராகவேண்டும் ஒரு பணக்காரன் அரசியல்வாதி நடிகன் என்றால் நேரில் ஆகதகுந்த உறுதியான ஆதாரம் இருக்கவேண்டும்? சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் தான் அனால் பணக்காரன் அரசியல்வாதி நடிகன் என்றால் அப்போ சட்டம் அவர்கள் முன் விழுந்து வணங்கும் என்று சொல்வது போல இருக்கின்றது.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
19-செப்-202109:30:06 IST Report Abuse
Hari ஆக நமக்கு சிலந்திவலை சட்டம்தான் இன்னும் வேலை செய்கிறது.(சிறு பூச்சிகள்மட்டுமே சிக்கிக்கொள்ளும் பெரும் மிருகங்கள் சிலந்தி வலையை அறுத்துக்கொண்டு சென்றுவிடும்)
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
19-செப்-202108:32:39 IST Report Abuse
RajanRajan 'நேரில் ஆஜராகும்படி உத்தரவிட உறுதியான ஆதாரங்கள் தேவை': உச்ச நீதிமன்றம். ஜுட்ஜ் சாமிகளா நீங்க எந்த உலகத்திலே இருக்கிறீங்க? இந்த தமிழகத்தில் பாருங்க, வாயில்லா ஜீவன்களான அந்த எறும்பையும் கறையானையும் வைத்தே நீதிபதியை மயங்கி விழ வச்சு கோடிகளில் ஆட்டைய போட்டு விருது வாங்கின மகான்கள் வாழ்ந்து இன்னிக்கு சமதிலேயும் மணிமண்டபத்திலும் இருக்கிறார்கள். ஒரு கூட்டம் அதுங்களுக்கு கும்மியடிச்சு குத்தாட்டம் போடுது. அவிங்க வாரிசுக்களிடமா உங்க சட்ட புத்தகம் விளையாட முடியும். ?? படா ஜோக் பண்ணுறீங்க எசமான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X