தமிழக காங்., மீது சோனியா அதிருப்தி!| Dinamalar

தமிழக காங்., மீது சோனியா அதிருப்தி!

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (33)
Share
புதுடில்லி: தமிழக காங்., விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும்' என, சீனியர் தலைவர்கள் சோனியாவிடம் சொல்ல, 'இப்போதைக்கு தமிழகம் முக்கியம் இல்லை. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கவனியுங்கள்' எனக் கறாராக சொல்லி விட்டார்.தமிழக காங்., தலைவர்கள் சிலர், தீவிரமான தி.மு.க., பக்தர்களாகி விட்டது சோனியாவுக்கு பிடிக்கவில்லை. பீட்டர் அல்போன்ஸ் விவகாரத்தில் தமிழக காங்.,

புதுடில்லி: தமிழக காங்., விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும்' என, சீனியர் தலைவர்கள் சோனியாவிடம் சொல்ல, 'இப்போதைக்கு தமிழகம் முக்கியம் இல்லை. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கவனியுங்கள்' எனக் கறாராக சொல்லி விட்டார்.



latest tamil news


தமிழக காங்., தலைவர்கள் சிலர், தீவிரமான தி.மு.க., பக்தர்களாகி விட்டது சோனியாவுக்கு பிடிக்கவில்லை. பீட்டர் அல்போன்ஸ் விவகாரத்தில் தமிழக காங்., தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார் சோனியா.


latest tamil news


பீட்டருக்கு தி.மு.க., அரசு பதவி கொடுத்தது காங்., தலைமைக்கு பிடிக்கவில்லை. காங்கிரசை விட தி.மு.க., தலைவர் ஸ்டாலினை புகழ்வதிலேயே பீட்டர் அல்போன்ஸ் அதிக கவனம் செலுத்துகிறார் என சொல்லும் காங்., தலைவர்கள், ஒருவேளை அவர் தி.மு.க.,வில் சேர்ந்து விடுவாரோ என, சோனியா காந்தி சந்தேகப்படுகிறார் என்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X