தமிழ்நாடு

துவக்கம்; முடக்குச் சாலை மேம்பால பணி துவக்கம்; நகரில் போக்குவரத்து மாற்றம்

Added : செப் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை-மதுரை - தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை சந்திப்பு முதல் டோக் நகர் சந்திப்பு வரை மேம்பாலம் அமைக்கும் பணி நாளை(செப்.,20) துவங்குகிறது. இதையொட்டி இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மதுரை நகரில் இருந்து முடக்குச்சாலை - தேனி மெயின் ரோடு - அச்சம்பத்து வழியாக வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் அதே வழித்தடத்தில் செல்லலாம். நாகமலைபுதுக்கோட்டை
துவக்கம்; முடக்குச் சாலை மேம்பால பணி துவக்கம்; நகரில் போக்குவரத்து மாற்றம்

மதுரை-மதுரை - தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை சந்திப்பு முதல் டோக் நகர் சந்திப்பு வரை மேம்பாலம் அமைக்கும் பணி நாளை(செப்.,20) துவங்குகிறது. இதையொட்டி இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை நகரில் இருந்து முடக்குச்சாலை - தேனி மெயின் ரோடு - அச்சம்பத்து வழியாக வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் அதே வழித்தடத்தில் செல்லலாம். நாகமலைபுதுக்கோட்டை மற்றும் நான்குவழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழியாக நகருக்குள் வரும் டூவீலர்கள், மூன்று சக்கர வாகனங்கள், கார், இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் அச்சம்பத்து வழியாக டோக்நகர் சந்திப்பு வரை வந்து இடதுபுறம் திரும்பி டோக்நகர் - கோச்சடை ரோடு - பாஸ்போர்ட் அலுவலகம் வழியாக முடக்குச்சாலை செல்ல வேண்டும்.

பஸ்கள், கனரக வாகனங்கள் நான்குவழிச்சாலையில் இருந்து துவரிமான் - மேலக்கால் மெயின் ரோடு - கோச்சடை வழியாக நகருக்குள் வர வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman -  ( Posted via: Dinamalar Android App )
19-செப்-202104:12:59 IST Report Abuse
Jayaraman பாதசாரிகள் cross பண்ணுவதற்கு வசதியாக, 7 அடி அகல மேல் நடைபாதைகளை அமைக்கலாம். சுரங்கப்பாதைகளாக அமைத்தால் , மழை காலங்களில் தண்ணீர் சேரும்.
Rate this:
Manian - Chennai,ஈரான்
20-செப்-202101:54:01 IST Report Abuse
Manianசுரங்கப்பாதை இரவில் வாடகை தரமுடியாத ஏழைகள் தூங்குமிடமாக மாறி சமூக சேவை செய்யுமே மழைகாலத்தில் போட்டு சவாரிக்கு பயன் படுமே...
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
19-செப்-202104:05:29 IST Report Abuse
Manian படிக்க முடியாத படம் வீண்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X