ஆப்கன் பள்ளிகளில் பெண்களுக்கு தடை| Dinamalar

ஆப்கன் பள்ளிகளில் பெண்களுக்கு தடை

Added : செப் 19, 2021 | கருத்துகள் (1)
Share
காபூல்:ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். ஆனால் பள்ளிகளில் மாணவிகளுக்கு அனுமதிஇல்லை என அறிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆக. 15ம் தேதி கைப்பற்றினர். '1996 - 2001ம் ஆண்டு வரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு இருக்காது பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும்' என

காபூல்:ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர். ஆனால் பள்ளிகளில் மாணவிகளுக்கு அனுமதிஇல்லை என அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆக. 15ம் தேதி கைப்பற்றினர். '1996 - 2001ம் ஆண்டு வரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு இருக்காது பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும்' என தலிபான்கள் உறுதியளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதிலிருந்து முழுவதுமாக மாறுபட்டு உள்ளனர். அனைத்திலும் பெண்களுக்கான உரிமையை மறுத்து வருகின்றனர்.

ஆப்கனின் காமா செய்திகளில் 'ஆப்கனின் எமிரேட் அரசில் அனைத்து தனியார் அரசு சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மதரீதியான பள்ளிகளை இன்று (செப். 19) முதல் திறக்கலாம். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவிகளை புறக்கணித்து தலிபான்கள் விடுத்துள்ள இந்த அறிவிப்பால் ஆசிரியைகள், மாணவிகள் நிலை, எதிர்காலம் குறித்து சர்வதேச கல்வியாளர்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும், வல்லுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X