பிறவி, துறவி... பிரதமரான வரலாறு ! - பிறந்த நாள் சிறப்பு கட்டுரை| Dinamalar

பிறவி, துறவி... பிரதமரான வரலாறு ! - பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (63)
Share
பெயர்: நரேந்திர மோடிபிறந்த நாள்: 17.9.1950பிறந்த இடம்: வாத் நகர், குஜராத்தந்தை: தாமோதர்தாஸ் மோடிதாயார்: ஹிராபென்கல்வி: எம்.ஏ., அரசியல் அறிவியல் (குஜராத் பல்கலை. 1983, தொலை துாரக் கல்வி) அமெரிக்காவில் மூன்று மாத, டிப்ளமா (1993, பப்ளிக் ரிலேஷன்ஸ், இமேஜ் மேனேஜ்மென்ட்) சாதனைப்பயணம்...* 1972, அக். 3: ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்தார்.*1974, ஜூன் 3: குஜராத்தில் ஊழலுக்கு எதிரான, இளைஞர் நவநிர்மாண்
 பிறவி, துறவி, பிரதமர், வரலாறு

பெயர்: நரேந்திர மோடி


பிறந்த நாள்: 17.9.1950
பிறந்த இடம்: வாத் நகர், குஜராத்
தந்தை: தாமோதர்தாஸ் மோடி
தாயார்: ஹிராபென்
கல்வி: எம்.ஏ., அரசியல் அறிவியல் (குஜராத் பல்கலை. 1983, தொலை துாரக் கல்வி) அமெரிக்காவில் மூன்று மாத, டிப்ளமா (1993, பப்ளிக் ரிலேஷன்ஸ், இமேஜ் மேனேஜ்மென்ட்)


சாதனைப்பயணம்...


* 1972, அக். 3: ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்தார்.

*1974, ஜூன் 3: குஜராத்தில் ஊழலுக்கு எதிரான, இளைஞர் நவநிர்மாண் இயக்கத்தில் சேர்ந்தார்.

* 1975, ஜூன்3: எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்தில், சீக்கியர் போல வேடம் அணிந்து, போலீஸ் பார்வையில் இருந்து தப்பினார்.
*1985: பா.ஜ.,வில் சேர்ந்தார்.

* 1987, பிப். 3: குஜராத் பிரிவின் பா.ஜ., அமைப்பு செயலரானார்.

*1989, ஜூன் 3: அத்வானியின் மக்கள் சக்தி யாத்திரையில் பங்கேற்றார்.

*1995, அக். 3: பா.ஜ., தேசிய செயலரானார்.

*1998, ஜன. 5: பா.ஜ., தேசிய பொதுச் செயலரானார்.

* 2001, அக். 7: குஜராத் முதல்வராக பதவியேற்றார்.

* 2002, டிச. 1: இரண்டாவது முறையாக குஜராத் முதல்வர்.

* 2007, ஜூன் 1: குஜராத்தின் நீண்ட நாள் முதல்வர். -2,063 நாட்கள்.

* 2007, டிச. 23: குஜராத் முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார்.

* 2012, டிச. 26: நான்காவது முறையாக குஜராத் முதல்வர்.

* 2013, ஜூன் 9: லோக்சபா தேர்தலுக்கான (2014) பா.ஜ., குழு தலைவர்.

* 2013, செப். 13: பிரதமர் வேட்பாளராக தேர்வானார்.

* 2014, மே 26: பிரதமராக பதவி ஏற்றார்.

* 2014, ஜூன் 15: பூட்டானுக்கு முதல் வெளிநாட்டு பயணம் சென்றார்.

* 2014, ஜூலை 14: பிரேசிலில் 6வது 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்றார்.

* 2014, ஆக. 28: அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் துவக்கினார்.

* 2014, அக். 2: துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார்.

* 2014, டிச. 8: 'டைம்' பத்திரிகையின் ஆண்டின் சிறந்த நபராக தேர்வானார்.

* 2015, டிச. 25: பாகிஸ்தானுக்கு 12 ஆண்டுகளுக்கு பின் சென்றஇந்திய பிரதமர்.

* 2016, ஜூன் 8: அமெரிக்க காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில்உரையாற்றினார்.

* 2016, நவ. 8: பணமதிப்பிழப்பு அறிவித்தார்.

*2017, ஜூன் 26: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

* 2017, ஜூலை 4: இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர்.

* 2019, பிப். 22: தென் கொரியாவின் சியோல் அமைதி பரிசு பெற்றார்.

* 2019, மே 30: பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

* 2019, செப். 25: 'துாய்மை இந்தியா' திட்டத்திற்காக 'கோல்கீப்பர்ஸ் குளோபல் கோல்ஸ்' விருது பெற்றார்.

* 2019, அக்., 11: மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷீ ஜிங்பிங்கை சந்தித்தார்.

* 2019, நவ. 14: பிரேசிலில் நடந்த 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்றார்.

* 2020, பிப். 24: ஆமதாபாதில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பங்கேற்றார்.

* 2020, மார்ச் 24: 'கொரோனா'ஊரடங்கு அறிவித்தார்.

* 2020, ஜூலை 3: லடாக்கில் ராணுவ வீரர்களிடம் உரையாற்றினார்.

* 2020, ஆக. 5: அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.


பிறவி -துறவி


ராஜ்கோட்டில், 1966ல் ராமகிருஷ்ணா மடத்தின் ஆத்மஸ்தானந்தா சுவாமியை சந்தித்து, துறவியாக விரும்புவதாக கூறினார். அவரோ, மக்களுக்கு சேவையாற்றும்படி அறிவுறுத்தினார். இமயமலை பகுதியில் சுற்றி, புது அனுபவங்களை பெற்றார். இளம் பருவத்திலேயே பற்றுகளில்இருந்து விடுபட்டார்.


*-ஐந்தாவது பிரதமர்


இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோருக்கு அடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்ற ஐந்தாவது பிரதமர் ஆனார்.


நாட்டுப்பற்று


தேசபக்தி கொண்டவர். தேர்தல் பிரசாரத்தில், 'தாய்நாட்டுக்கு ஓட்டளியுங்கள்' என கேட்டார். பேச்சுகளின் முடிவில் 'பாரத் மாதா கி ஜெ, ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்' என முழக்கமிடுவார்.


'லஞ்சம் தவிர்'


குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற போது, 'லஞ்சம் வாங்காதே' என, அவரது தாய் ஆசி வழங்கினார். இதை தன் வாழ்விலும், அரசு நிர்வாகத்திலும் கடைப்பிடிக்கிறார்.----------


கண்டிப்பான நிர்வாகி


வேலை விஷயத்தில் கண்டிப்பானவர். ஒழுக்கத்தை எதிர்பார்ப்பார். பணி நேரத்தில் அலைபேசி பயன்படுத்துவது பிடிக்காது. தவறு செய்தால், அன்பாக பேசி புரிய வைப்பார். அவரது கட்டுப்பாட்டை மீறி ஏதாவது நடந்தால், அதை ஒரு சிறிய காகித துண்டில் எழுதி கிழித்து விடுவார்.


முதல் தலைவர்


இந்திய சுதந்திரத்துக்கு பின் பிறந்து, பிரதமரான முதல் தலைவர்... ஜனாதிபதி மாளிகை முன், திறந்தவெளி அரங்கில் பதவியேற்ற முதல் பிரதமர்... அயோத்தி ராம் ஜென்ம பூமிக்கு சென்ற முதல் பிரதமர்... நீண்டநாள் பதவி வகிக்கும் காங்., அல்லாத பிரதமர்.


மகத்தான திட்டங்கள்


கங்கை ஆற்றை சுத்தப்படுத்துதல், துாய்மை இந்தியா, திட்டக்கமிஷன் கலைப்பு, அனைவருக்கும் வங்கிக்கணக்கு, ஸ்மார்ட் சிட்டி, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா,கிராமங்களை தத்தெடுத்தல், சமூக நல திட்டங்களுக்கு ஆதார் பயன்பாடு, சமையல் எரிவாயு மானியத்தை ஒழுங்குபடுத்தியது, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு, ஜி.எஸ்.டி., வரி அமல், பண மதிப்பிழப்பு, முத்தலாக் தடை மசோதா, காஷ்மீர் சிறப்பு அங்கீகாரம் ரத்து உட்பட, பல வரலாற்று திட்டங்களை நிறைவேற்றினார்.


latest tamil news





துாய்மை இந்தியா


சுற்றுப்புறச் சூழலுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக, மகாத்மா காந்தியின் பிறந்ததினமானஅக்., 2ல், 'துாய்மை இந்தியா' திட்டம் ௨௦௧௪ல் தொடங்கப்பட்டது. கழிப்பறை வசதி, சுத்தமான குடிநீர், பொது இடங்களில் சுகாதாரம் போன்றவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இன்று லட்சக்கணக்கான வீடுகளில் புதிதாக கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவரது பணியை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா., வின் 'சாம்பியன்ஸ்ஆப் எர்த்' விருது வழங்கப்பட்டது.


* பயங்கரவாதிகளுக்கு பதிலடி


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்., 14ல், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் நமது 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி தரும் விதமாக பிப்., 26ல், பாகிஸ்தானின் பாலகோட்டில், பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமானப்படை வெடிகுண்டு வீசி தாக்கியது. 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என கூறப்பட்டது. ஜெய்ஷ் - இ -- முகமது பயங்கரவாத தலைவன் மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதிஎன ஐ.நா., அறிவித்தது. இது மோடி அரசின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி.


உழைப்பு... உயர்வு


குஜராத் முதல்வராக இருந்த போதும், பிரதமராக இருக்கும் போதும் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காதவர். பொதுவாக பிரதமராக இருந்தவர்கள், மதியம் அல்லது மாலை அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவர். காலை முதல், நள்ளிரவு வரை பணியாற்றுவார் மோடி.


படேலுக்கு கவுரவம்


இந்தியாவை ஒருங்கிணைத்த, 'இரும்பு மனிதர்' சர்தார் படேலுக்கு, உலகின் மிக உயரமான 597 அடி சிலையை, குஜராத்தில் அமைத்தார். விவேகானந்தரின் கொள்கைகளையும் மோடி பின்பற்றுகிறார்.


மருத்துவ காப்பீடு


ஏழைகளுக்கும் உயர்தர மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என எண்ணிய மோடி, 2018 செப்., 23ல் உலகின் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத்) தொடங்கினார்.


'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'


உரி ராணுவ முகாம் தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, 2016 செப்., 27ல் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய ராணுவம், பாக்., எல்லைக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்தினர். 7 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


நவராத்திரி விரதம்


நவராத்திரி பூஜையின் ஒன்பது நாளும், மோடி விரதம் இருப்பார். இதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் நவராத்திரி நாளில் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அப்போது, அதிபர் வெள்ளை மாளிகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மோடி விருந்தில் பங்கேற்றார். ஆனால், நவராத்திரி விரதம் என்பதால், ஒரு டம்ளர் சுடு தண்ணீர் மட்டும் அருந்திக் கொண்டார். அவருடன், விருந்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோர் அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.


உடன்பிறந்தவர்கள் எளிய வாழ்க்கை


*சோம்பாய், அண்ணன்: வாத்நகரில் முதியோர் இல்லம் நடத்துகிறார்.
*அம்ருத்பாய், அண்ணன்: தனியார் நிறுவன பிட்டராக பணியாற்றி ஓய்வு.
* பிரகலத்பாய், தம்பி: மளிகைகடை நடத்துகிறார்.
*வசந்திபென், தங்கை: இவரது கணவர் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி., ஊழியர்.
*பங்கஜ்பாய், தம்பி: குஜராத் தகவல் துறையில் பணியாற்றுகிறார்.
* தாய் ஹிராபென் இவருடன் வசிக்கிறார்.


காலை பொழுதில் யோகா


*குஜராத்தியில் கவிதை எழுதுவார்.
* ஹிந்தியில் கையெழுத்திடுவார்.
* தினமும் யோகாவுடன் காலை பொழுதை துவங்குவார்.
* குஜராத் வெள்ள நிவாரண பணியில், 17 வயதில் ஈடுபட்டார்.
*அறுபது நாடுகளுக்கு சென்று உள்ளார். 14 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை பெற்றுத் தந்துள்ளார்.
*'கூகுளில்' எதையும் தேடி அறிந்து கொள்ள முடிவதால், மோடியின் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டதாம்.
* நவராத்திரி பூஜையின் ஒன்பது நாளும் விரதம் இருப்பார்.
* தனிமை விரும்பி. மயில், புறாக்களுடன் பொழுதை கழிப்பார்.
* தினமும் ஐந்து மணி நேரம் துாங்குவார்.
* டிஸ்கவரி, 'டிவி' சேனலை சேர்ந்த, பியர் கிரில்ஸ் உடன், வனத்தில் சாகச பயணம் செய்தார்.


யோகா தினம்


'யோகா'பயிற்சியால் உடலும், மனமும் சுறுசுறுப்பாகிறது என 2014 செப்டம்பரில் ஐ.நா., சபையில் பேசிய பிரதமர் மோடி, யோகாவை உலக நாடுகளும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார். இதனை 170 நாடுகள் ஏற்றன. ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., அறிவித்தது.


ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை


தமிழகத்தில் தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் மற்றும் எந்த துறை அலுவலராக இருந்தாலும், அரசு வாகனங்கள் பெரும்பாலும் அவர்தம் குடும்பத்தினரால் பயன்படுத்தப்படுகின்றன. மனைவி மார்க்கெட் செல்லவும், குழந்தைகள் பள்ளி செல்லவும் அரசு கார்கள், 'பறப்பதை' காண முடிகிறது.ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சி, அதிகாரத்தில் சொந்த பந்தங்களின் தலையீடு இல்லை. அவரது தாய், சகோதரர்கள், உறவினர்கள் எந்த இடத்திலும் பிரதமரை சார்ந்தவர்கள் என்ற பந்தா காண்பிப்பதில்லை. சாதாரண 'மிடில் கிளாஸ்' குடும்ப வாழ்க்கை முறை தான். அரசு வாகனங்களை யாரும் பயன்படுத்துவதில்லை. அவரது தாய், சகோதரரின் குடும்பத்தினர் பஸ், ஆட்டோவில் தான் செல்கின்றனர். இந்தியாவில் 30 மாநிலங்களில் 15 தேர்தல்களில், 450 முதல் 500 முதல்வர்களை பார்த்திருக்கிறோம்... இதில், ஊழல் கறை படியாதவர்கள் வெகு சிலரே. அந்த ஒரு சிலரில் மோடியும் ஒருவர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வேறு என்ன வேண்டும். இதில் ஒவ்வொரு இந்தியரும்பெருமைப்பட வேண்டும்.


'நாட்டின் பாதுகாவலன்'


பிரதமர் மோடி தேசப்பக்தி கொண்டவர். 'பாரத் மாதா கி ஜெ', 'ஜெய்ஹிந்த்' 'வந்தே மாதரம்' என முழக்கமிடும் இவரது பேச்சு, மக்களிடையே தேசிய உணர்வைஎழுப்பும். நாட்டின் பாதுகாவலன் என தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொண்டார். நாட்டை போல தாய் மீதும் மிகுந்த மரியாதை கொண்ட இவர், முக்கிய நிகழ்வுகளின் போது அவரை நேரில் சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மூலமாக, பல்வேறு நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா என 2019 மே வரை 59 நாடுகளுக்கு சென்றுள்ளார்.


ஒரே சீரான வரி


நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வர, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, 2017 ஜூலை 1ல் அமல்படுத்தப்பட்டது. இதில் 5, 12, 18, 28 சதவீதம் என்ற விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது. பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று பெரும்பாலான பொருட்கள் 18 சதவீதத்துக்கு கீழே கொண்டு வரப்பட்டன. ஜி.எஸ்.டி.,யால் நாட்டின் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X