மோடியின் 3 எழுத்து மந்திரம் :- பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021 | கருத்துகள் (67)
Advertisement
பிரதமர் நரேந்திரமோடியின் அரசியல் அதிகார பிரவேசம் (2001 -21) 20 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்திய வரலாற்றையும் மாற்றியெழுதியிருக்கிறது. சோதனைகளைச் சாதனைகளாக்கி சவால்களைச் சரித்திரமாக்கிய ஒரு தேசத்தலைவரின் வாழ்க்கைப்பயணத்தை சற்றே கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.நாட்டு மக்கள் அத்தனை பேரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரு தலைவன் பூமியில் இதுவரை தோன்றவில்லை. இந்த உண்மையை தலையசைத்து
 மோடி, மூன்று எழுத்து, மந்திரம் -

பிரதமர் நரேந்திரமோடியின் அரசியல் அதிகார பிரவேசம் (2001 -21) 20 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்திய வரலாற்றையும் மாற்றியெழுதியிருக்கிறது. சோதனைகளைச் சாதனைகளாக்கி சவால்களைச் சரித்திரமாக்கிய ஒரு தேசத்தலைவரின் வாழ்க்கைப்பயணத்தை சற்றே கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.

நாட்டு மக்கள் அத்தனை பேரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரு தலைவன் பூமியில் இதுவரை தோன்றவில்லை. இந்த உண்மையை தலையசைத்து ஏற்றுக் கொண்டால், நரேந்திர மோடி என்கிற தலைவரை எடைபோடும் வேலை எளிதாகி விடும். வரலாற்றின் பாதையில் நெடுந்துாரம் பின்னோக்கி செல்ல தேவை இல்லை. மோடிக்கு முன்னால், மோடிக்கு பின்னால் என இரண்டு திசையிலும் தலா ஒரு தசாப்தம் திரும்பிப் பார்த்தால் போதும். 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.
நிரம்ப படித்தவர். பொருளாதார அறிஞர். நேர்மையானவர். அரசியல்வாதிக்கான எந்த இலக்கணமும்இல்லாத நல்ல மனிதர். ஆனால் அவர் ஆட்சியில் என்ன நடந்தது? ஊழல் கொடிகட்டி பறந்தது. சராசரி இந்தியர்கள் கற்பனையிலும் கண்டிராத ஆயிரங்கோடி ஊழலில் திளைத்தனர், நேர்மையான சர்தாரின் அமைச்சரவை தோழர்கள். பார்த்தும் பாராதது போல பெருமூச்சு விடுவது மட்டுமே பிரதமரால் செய்ய முடிந்தது. ஊழல் ஒரு கேன்சர். ஆரம்பத்தில் கண்டறிந்து அழிக்க தவறினால் அரசு நிர்வாகம் என்ற உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் பரவி உயிரையே குடித்து விடும். எனவேதான் நாட்டு மக்கள் அனைவரும்அது ஒழிய வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.வாக்காளர் தெளிவு


நாட்டை வழிநடத்தும் தலைவன் நல்லவனாக இருந்தால் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்கள். கூட்டணிக் கட்சிகள் என்ற ஊன்றுகோலை பிடித்துக் கொண்டு நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற பிரதமரால், ஊழலை வேடிக்கை பார்க்கத்தான் முடியுமே தவிர தடுத்து நிறுத்த முடியாது என்பதும் மக்களுக்கு புரிந்தது.வாக்காளர்களுக்கு ஏற்பட்ட அந்த தெளிவு, 2014 தேர்தலில் எதிரொலித்தது. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து களம் இறங்கிய பா.ஜ., கட்சிக்கு 282 தொகுதிகளில் வெற்றியைக் கொடுத்து, எவருடைய தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்க ஆணையிட்டனர் மக்கள்.

முந்தைய தேர்தலில் பெற்றதைவிட, 166 சீட்டுகளை கூடுதலாக வழங்கினர். மோடிதான் பிரதமராக வேண்டும் என முடிவு செய்ததால், அந்த கோஷத்தை முன்னிறுத்தி ஓட்டு கேட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு 54 தொகுதிகளில் வெற்றியைப் பரிசாக்கினர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 336 ஆக உயர்ந்தது. மறுபுறம், பத்தாண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்களை கொடுத்து, லோக்சபாவின் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட அதற்கு கிடைக்க விடாமல் தடுத்து விட்டனர் வாக்காளர்கள். வாஜ்பாய், அத்வானி போன்ற ஜாம்பவான்கள் பா.ஜ.,வின் கடிவாளத்தைக் கையில் வைத்திருந்தபோது இத்தகைய மகத்தான வெற்றியை அக்கட்சிக்கு வழங்காத வாக்காளர்கள், அதுவரை தேசிய அரசியலில் அதிகம் அறியப்படாமல் இருந்த ஒரு மாநில முதல்வரை எப்படிஇந்தளவுக்கு ஆதரித்து பிரதமர் நாற்காலியில் அமர வைத்தார்கள்? 12 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு முதல்வராக மோடி வழங்கிய திறமையான ஆட்சி அதற்கு முக்கிய காரணம். குஜராத் மாடல் என்று சொல்லப்படுகிற அவரது நிர்வாக உத்திகள் ஏற்கனவே பல மாநிலங்களின் முதல்வர்களை வசீகரித்து இருந்தது.தொடர் வெற்றி


வரலாறு காணாத 2001 கலவரத்துக்கு பிறகு மோடியும் அவரது கட்சியும் காணாமல் போய்விடும் என ஆருடம் கணித்தவர்கள் தொழிலை விட்டு ஓடும் அளவுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் மோடி அங்கே வெற்றி வாகை சூடிவந்தார்.சிறுபான்மை மக்களின் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது என்பதால், மோடியின் அணுகுமுறை அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் என்பதை விமர்சகர்கள் ஒப்புக் கொண்டார்கள். சலுகையின் பெயரால் சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களை ஓட்டு வங்கியாக கையாளும் தந்திர அரசியலை மோடி அடியோடு வெறுத்தார்.


latest tamil newsஎண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு சமமான வாய்ப்புக் களம் நமக்கு வழங்கப்படுகிறது என சிறுபான்மை மக்கள் நம்பும்வகையிலான பொதுச்சூழலை அரசின் திட்டங்கள் வழியாக வடிவமைத்தார் மோடி. அதன் விளைவாகத்தான் அரசியலோடு எந்தத் தொடர்பும் இல்லாத பலதரப்பு சிறுபான்மை மக்களும் தேர்தல் நேரத்தில் மோடிக்கு ஓட்டு சேகரிக்க, வீடு வீடாக செல்லும் காட்சிகளை காணமுடிந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத அமைதியான சூழ்நிலையை உருவாக்கிய பிறகு, அனைத்து பிரதேசங்களுக்குமான வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவது அவருக்கு சுலபமானது.

மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருந்தால் மாநில அரசுகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என உணர்ந்த மோடி, கோடீஸ்வர தொழிலதிபர்களை குஜராத்தில் தொழில் தொடங்க ஊக்குவித்து வேலைவாய்ப்புகளையும் நடுத்தர வர்க்கத்தின் சராசரி வருமானத்தையும் குறுகிய காலத்தில் பல மடங்கு பெருக வழி செய்தார்.திறமைக்கு மரியாதை


மாறுபட்ட தன் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க சுயநலம் இல்லாத திறமையாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என ஐ.ஏ.எஸ்., கூட்டத்தில் அவர் பூதக்கண்ணாடியால் தேடிக் கண்டுபிடித்து தன் மாநிலத்துக்கு இழுத்துக் கொண்டார். அந்த அதிர்ஷ்டசாலிகளில் அநேகம் பேர் தமிழர்கள் என்பது நமக்கும் பெருமை.

இத்தகைய ஊக்க நடவடிக்கைகளால் ஓடிவந்து மோடிக்கு தோள்கொடுத்து குஜராத்தின் அமோக வளர்ச்சிக்கு பங்களித்த இந்திய தொழிலதிபர்கள் இன்று சர்வதேச அளவில் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் சாதிக்க முடிந்ததை ஏன் இந்திய அளவில் எடுத்துச் செல்ல முடியாது என்ற சிந்தனை மோடியை சொந்த மாநிலத்துக்கு வெளியே பார்க்கத் துாண்டியது. எனவேதான், இன்னும் இரண்டாண்டுக்கு மேல் பதவிக்காலம் இருந்தாலும் முதல்வர் பதவியை உதறிவிட்டு தேசிய அரசியலுக்கு செல்ல அவர் தீர்மானித்தார்.

ஆனால், இந்தியா வெறும் குஜராத் அல்ல. குஜராத் போல பத்தாண்டுகளுக்கு மேலாக பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சித் திட்டங்களால் பண்பட்ட மண்ணாக வேறெந்த மாநிலமும் இல்லை. நலத் திட்டங்கள் என்ற போர்வையில் மக்களின் உழைத்து முன்னேறும் ஆர்வத்தையும் முயற்சியையும் முடக்கிப் போட்டு, தங்கள் குடும்ப வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு திட்டங்கள் தீட்டி வரிப்பணத்தை விரயம் செய்யும் அரசியல் தலைவர்களே மோடியின் கழுகுக் கண்களுக்குத் தென்பட்டார்கள்.காலம் இட்ட கட்டளை


மக்களை எப்போதும் ஒருவகை கிறக்கத்திலேயே வைத்திருப்பது நமக்கு நல்லது என நம்பும் அரசியல்வாதிகள் ஒருபுறம். எந்த மாற்றமும் இல்லாமல் எல்லாம் இப்படியே தொடர்ந்தால் நமக்கு பிரச்னை இல்லை என சிந்திக்கும் உயர் அதிகார வர்க்கம் இன்னொரு புறம். இந்த இரு பிரிவினரால் ஆதாயம் பெறும் ஏனைய ஆதிக்க சக்திகள் அடுத்த அணி. இந்த மூன்று பிரிவினரும் தமக்குள் எழுதாத ஒப்பந்தம் போட்டு இயங்கிக் கொண்டு இருக்கும் கொடுமையை மோடி பார்த்தார். இந்த சுயநலக் கூட்டணியின் வலைப் பின்னல்களை அறுத்து எறிந்தால் மட்டுமே இந்தியாவை உலக அரங்கில் உன்னத இடத்துக்கு எடுத்துச் செல்லும் தனது கனவு மெய்ப்படும் என்பதை அவர் புரிந்து கொண்டார். அந்தப் புரிதலின் பிரதிபலிப்புதான் அடுத்தடுத்து மோடி எடுத்து வரும் அதிரடியான செயல்பாடுகள்.

இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்கள் நீங்க கசப்பு மருந்து கொடுப்பதிலும் அவசியமானால், அறுவை சிகிச்சை செய்வதிலும் அவருக்கு தயக்கம் கிடையாது. காலம் தனக்கு இட்ட கட்டளை என ஏற்று அந்தக் காரியங்களை, கடமை என செய்கிறார். அந்த கடமை உணர்வே அவரது மூன்றெழுத்து மந்திரம்.

நமக்குத் தேவை வலிமையான ஒரு தலைவன்; சுயநலம் இல்லாத அவனுடைய செயல்பாடு என்ற தெளிவான மன நிலையில் மோடியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தி இருக்கின்றனர் இந்திய மக்கள். அவர்களின் எண்ணப்படி மோடியும் செயல்படுகிறார். மோடிக்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக அவரது செயல்பாடுகளை எதிர்க்கும் தார்மீக உரிமை எவருக்கும் கிடையாது. ஏனெனில் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது ஆட்சி அமைத்தவர்களின் பொறுப்பு. அதற்கு முட்டுக்கட்டை போடாமல் ஒத்துழைப்பு தருவது ஆட்சி அமைக்கத் தவறியவர்களின் கடமை. அதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.-

ரே


Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
19-செப்-202123:29:18 IST Report Abuse
Vena Suna அருமை.நன்று.
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
19-செப்-202123:14:38 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN தேசபக்தி, அர்ப்பணிப்பு, நேர்மை, செயல் திறன், உண்மை, ஒழுக்கம், தலைமை பண்பு, நிர்வாகத்திரன், ஆளுமை கொண்ட திரு. மோடி அவர்களை பாரத பிரதமராக தேர்ந்து எடுத்த மக்களுக்கு நன்றி, தமிழக மக்கள் மோடியை தேர்ந்து எடுக்க வில்லை ஆதலால் இவர்கள் திரு. மோடியை பற்றி கருத்து கூறவும் குறை கூறவும் அருகதை அற்றவர்கள். பாரத தாயின் தவப்புதல்வன் திரு. மோடி.
Rate this:
Cancel
Uma Kumar - Madurai ,யூ.எஸ்.ஏ
19-செப்-202119:39:30 IST Report Abuse
Uma Kumar PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X