பொது செய்தி

இந்தியா

பூஸ்டர் டோஸ் தேவை இல்லை: மருத்துவ நிபுணர்கள்

Updated : செப் 19, 2021 | Added : செப் 19, 2021
Share
Advertisement
புதுடில்லி-'கொரோனாவுக்கு எதிராக இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்களுக்கு 'பூஸ்டர் டோஸ்' எனப்படும் கூடுதல் தடுப்பூசி இந்தியாவில் தற்போது உள்ள நிலையில் தேவைஇல்லை' என, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணி நம் நாட்டில் வேகமெடுத்துள்ளது. தேவைப்படாதுதற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், போடப்பட்ட குறிப்பிட்ட

புதுடில்லி-'கொரோனாவுக்கு எதிராக இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்களுக்கு 'பூஸ்டர் டோஸ்' எனப்படும் கூடுதல் தடுப்பூசி இந்தியாவில் தற்போது உள்ள நிலையில் தேவைஇல்லை' என, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.



latest tamil news


கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணி நம் நாட்டில் வேகமெடுத்துள்ளது. தேவைப்படாதுதற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், போடப்பட்ட குறிப்பிட்ட காலத்துக்குப் பின், அதன் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதையடுத்து வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில், பூஸ்டர் டோஸ் எனப்படும் கூடுதல் தடுப்பூசி வழங்கும் பணி துவங்கியுள்ளது.நம் நாட்டிலும் மூன்றா வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர் கள் கூறியுள்ளதாவது:ஆய்வுகளின்படி இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பின், நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதன் வீரியம் அதிகபட்சம் 10 மாதங்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.நம் நாட்டில் இந்த ஆண்டு ஜன.,யில் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. அதனால் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டோரிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.


latest tamil news


மேலும் எந்த வகை பிரிவினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் குறைகிறது என்பதை கண்டறிய வேண்டும். அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவைப்படாது.முடிவெடுக்கலாம்பாதிப்பு ஏற்படக் கூடியவர்களை கண்டறிந்து, அதற்கேற்ப மூன்றாவது டோஸ் செலுத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.நாட்டில் பெரும்பாலா னோருக்கு தடுப்பூசி இரண்டு டோஸ் போடப்பட்டதும் இது குறித்து முடிவெடுக்கலாம். அதனால் தற்போதைக்கு மூன்றாவது டோஸ் செலுத்துவதற்கு எந்த தேவையும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X