தி.மு.க.,வினரை தாக்கிய ஐவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினரை தாக்கிய ஐவர் கைது

Added : செப் 19, 2021
Share
திண்டுக்கல்-திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகர்களை தாக்கியது தொடர்பாக நேற்று மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் சட்டாம்பிள்ளை தெருவில் சில நாட்களுக்கு முன், தி.மு.க., பிரமுகர்கள் மீரான்பாபு, விஜயராஜன் ஆகியோர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. சரமாரியாக வெட்டியதில் இருவரும் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். முக்கிய

திண்டுக்கல்-திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகர்களை தாக்கியது தொடர்பாக நேற்று மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் சட்டாம்பிள்ளை தெருவில் சில நாட்களுக்கு முன், தி.மு.க., பிரமுகர்கள் மீரான்பாபு, விஜயராஜன் ஆகியோர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. சரமாரியாக வெட்டியதில் இருவரும் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான மோகன்ராஜ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார் 50, சஞ்சய்குமார் 22, சிவா என்ற சிவசூரியன் 24, சுகுமார் 33, முகமது ஆரிப் 23, ஆகிய ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X